Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Super User / 2010 செப்டெம்பர் 01 , மு.ப. 06:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஜமீலா நஜ்முதீன்)
மலேஷியாவில் குழுவொன்றினால் கடத்தப்பட்ட இலங்கையர் ஒருவர் கொல்லப்பட்டு மேலும் இருவர் தப்பிய சம்பவம் தொடர்பாக மலேஷியாவிலுள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயம் அறிக்கையொன்றைத் தயாரித்துள்ளது.
இது ஒரு திட்டமிடப்பட்ட குற்றச்செயலெனத் தெரியவந்திருப்பதாக மலேஷியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் கலாநிதி டி.டி. ரணசிங்க டெய்லிமிரர் இணையத் தளத்திற்குத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிறன்று நடைபெற்ற இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் இரத்தினக்கல் விற்பனை செய்வதற்காக மலேஷியாவுக்கு வந்தவர்கள் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கடந்த வாரம் கோலாலம்பூர் விமான நிலையத்தில் வைத்து இவர்கள் கடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வீடொன்றில் வைக்கப்பட்டிருந்த இவர்கள் தப்பிச் செல்ல முற்பட்டபோது ஒருவர் கொல்லப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக மலேஷியவர்கள் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இலங்கை உயர் ஸ்தானிகர் தெரிவித்துள்ளார். மேற்படி கடத்தல் குழுவிடமிருந்து தப்பிய இருவரும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Jul 2025
14 Jul 2025
14 Jul 2025