2021 ஜூன் 18, வெள்ளிக்கிழமை

கிழக்கு மாகாண முதலமைச்சருடன் நிருபமா ராவ் சந்திப்பு

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 01 , மு.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(றிபாயா நூர், வதனகுமார், எஸ்.எஸ்.குமார்)

இந்திய வெளியுறவு செயலாளர் நிருபமா ராவ் இன்று புதன்கிழமை காலை கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை முதலமைச்சரின் அலுவலகத்தில் வைத்து சந்தித்தார்.

இதன் போது கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடப்பட்டன. கிழக்கு மாகாணத்தில் யுத்தத்தினால் வீடுகளை இழந்தவர்களுக்கு வீடுகள் அமைப்பது தொடர்பாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

இந்தியாவிலுள்ள சேவா எனும் பெண்கள் அமைப்பின் ஊடாக கிழக்கு மாகாணத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களின்
வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப உதவுமாறு கிழக்கு மாகாண முதலமைச்சர் இந்திய வெளியுறவு செயலாளரிடம் வேண்டுகோள் விடுத்தார்.

இது குறித்து ஒரு மாதகாலத்திற்குள் ஆராய்ந்து முடிவெடுப்பதாகவும் இந்திய வெளியுறவு செயலாளர் நிரூபமா ராவ் தெரிவித்தாக கிழக்கு மாகாண முதலமைச்சரின் ஊடக இணைப்பாளர் தேவராஜ் தெரிவித்தார். இச்சந்திப்பு 15 நிமிட நேரம் இடம்பெற்றது.


  Comments - 0

  • sooryam priya Wednesday, 01 September 2010 06:57 PM

    முடிவு எடுக்கப்படுமா ? அபிவிருத்தி வழங்கப்படுமா? எல்லாமே கேள்வி குறியாக உள்ளது. எதுவானாலும் மக்களுக்கு நன்மை நடந்தால் சரி .

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .