2021 ஜூன் 18, வெள்ளிக்கிழமை

கோழிகளுக்குத் தட்டுப்பாடு

Super User   / 2010 செப்டெம்பர் 13 , பி.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(இந்திக்க ஸ்ரீ அரவிந்த)

நாட்டில் ஏற்பட்டுள்ள கோழிகளுக்கான தட்டுப்பாடு காரணமாக கோழி முட்டையின் விலை மூன்று ரூபாவால் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அகில இலங்கை கோழி வளர்ப்பாளர்கள் சங்கத் தலைவர் டாக்டர் டி.டி. வணசிங்க டெய்லிமிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

முட்டையிடும் கோழிகளுக்கு நாட்டில் ஏற்பட்டுள்ள  தட்டுப்பாடு காரணமாக முட்டைகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எதிர்வரும் மாதங்களில் ஒரு வயதான இரண்டு இலட்சம் முடையிடும் கோழிகள் தேவைப்படுகின்றன என அவர் கூறினார.

இது தொடர்பாக ஏற்கனவே அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளதாகவும்இ அவசரமாக ஒரு வயதானஇ முட்டையிடும் கோழிகளை இறக்குமதி செய்வதன் மூலம்  இப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் எனவும் வணசிங்க தெரிவித்தார். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .