2021 ஜூலை 30, வெள்ளிக்கிழமை

'மாணவர்களின் இஷ்டப்படி பல்கலைக்கழகம் இயங்காது'

Super User   / 2011 மார்ச் 24 , பி.ப. 01:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சபரகமுவ பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத்தை கலைத்துவிடுமாறு பல்கலைக்கழக அதிகாரிகளிடம் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க கோரியுள்ளார். ஒழுங்கீனமாக செயற்படும் மாணவர்களை பொலிஸார் கைதுசெய்வதற்கு வழிவிடுமாறும் அவர் கோரியுள்ளார்.

மாணவர்கள் பரீட்சைகளுக்கு சமுகமளிக்காவிட்டால் அவர்கள் சித்தியடையத் தவறியவர்களாக கருதப்படுவர் எனவும் அவர்களின் புலமைப்பரிசில் கொடுப்பனவு நிறுத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

மாணவர்களின் இஷ்டப்படி பல்கலைக்கழகம் இயங்க மாட்டாது எனத் தெரிவித்த அமைச்சர், பல்கலைக்கழகம் மீண்டும் திறக்கப்படுவதற்கு முன்னர் ஒழுங்கு நிலைநாட்டப்படும் எனவும் அவர் கூறினார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .