2022 ஓகஸ்ட் 11, வியாழக்கிழமை

இந்திய -இலங்கை மீனவ கூட்டுச்செயற்குழுக் கூட்டம் நாளை

Super User   / 2011 மார்ச் 27 , மு.ப. 09:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்திய - இலங்கை கூட்டுச் செயற்குழுக்கூட்டம் நாளை இந்திய தலைநகர் புதுடில்லியில் நாளை நடைபெறவுள்ளது.

மீன்பிடித்துறையில் அபிவிருத்தி ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து இக்கூட்டத்தில் ஆராயப்படும். அத்துடன் இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் மீன்பிடிப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்படவுள்ளது.

இலங்கைத் தூதுக்குழுவுக்கு வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலாளர் ரஞ்சித் உயங்கொட தலைமை தாங்கவுள்ளார். மீன்பிடித்துறை அமைச்சு, இலங்கை கடற்படை, புது டில்லியிலுள்ள உயர் ஸ்தானிகராலய அதிகாரிகள், சென்னையிலுள்ள உதவி உயர் ஸ்தானிகராலய அதிகாரிகள் ஆகியோரும் இப்பேச்சுவார்த்தையில் பங்குபற்றவுள்ளனர்.

இந்திய தூதுக்குழுவுக்கு இந்திய வெளிவிவகார அமைச்சின் இணைச் செயலாளர் ரி.எஸ்.திருமூரத்தி தலைமை தாங்கவுள்ளார்.(ST)
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .