2021 ஓகஸ்ட் 01, ஞாயிற்றுக்கிழமை

ரயில் - பஸ் மோதல்; நால்வர் காயம்

Super User   / 2011 மார்ச் 31 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சுபுன் டயஸ்)

ராகம, பட்டுவத்த பிரதேசத்தில் இன்று மாலை ரயிலொன்றும் பஸ் ஒன்றும் மோதிக்கொண்டதால் நால்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரசாந்த ஜயகொடி தெரிவித்தார்.

மேற்படி பஸ் ரயில் கடவையை புறக்கணித்துவிட்டு ரயில் பாதையை கடந்துசெல்ல முற்பட்டபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அவ்வேளையில் பஸ்ஸில் நான்கு பயணிகள் மாத்திரமே இருந்துள்ளனர்.

வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி வந்துகொண்டிருந்த ரயிலே இவ்விபத்தில் சம்பந்தப்பட்டுள்ளது.  காயமடைந்த நபர்கள்  ராகம பொது வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .