2021 ஓகஸ்ட் 02, திங்கட்கிழமை

சட்டவிரோதமாக அலங்கார மீன்பிடித்த ரஷ்ய தம்பதிக்கு அபராதம்

Super User   / 2011 ஏப்ரல் 10 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

திருகோணமலை நிலாவெளி பகுதியில் சட்டவிரோதமாக அலங்கார மீன்களை பிடித்த ரஷ்ய தம்பதியொன்றுக்கு திருகோணமலை பிரதான நீதவான் யூ.எல்.ஏ. அஸ்ஹர் தலா 50,000 ரூபா அபராதம் விதித்தார்.

இம்மீன்களைப் பிடிப்பதற்கான படகை இயக்கிய நபர் ஒருவருக்கு 25,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.

ஏப்ரல் 28 ஆம் திகதிக்கு முன்பாக அபராத தொகையை செலுத்துமாறு உத்தரவிட்ட நீதவான், மேற்படி தம்பதிகளின் கடவுச்சீட்டுகளை பறிமுதல் செய்யுமாறும் உத்தரவிட்டார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .