2021 ஜூலை 30, வெள்ளிக்கிழமை

இலங்கை அகதிகள் கூடாரங்களில் தடுத்துவைப்பு

Super User   / 2011 ஏப்ரல் 11 , மு.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

குயின்ஸ்லாந்து தடுப்பு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தஞ்சம் கோருவோர், எவ்வளவு காலத்திற்கு கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டிருப்பர் என கூற முடியாதென அவுஸ்திரேலிய குடிவரவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 570 குடியேற்றவாசிகள் வேய்பா நகரிலுள்ள ஸ்சேர்ஜர் விமானப்படைத் தளத்தில் வைக்கப்பட்டுள்ளனர். கிறிஸ்மஸ் தீவிலுள்ள தடுப்பு நிலையத்தில் நெரிசலை குறைப்பதற்காக அங்கிருந்து 300 பேர் குயின்ஸ்லாந்திலுள்ள தற்காலிக கூடாரங்களுக்கு மாற்றப்பட்டனர்.

இந்நிலையம் குறைந்தபட்சம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வரை திறந்திருக்கும் என அவுஸ்திரேலிய குடிவரவு திணைக்களம் அண்மையில் தெரிவித்திருந்தது.

கூரை அமைப்புகொண்ட பெரிய கூடாரங்களில் இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அத்திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் கூறினார். இது ஒரு தற்காலிக ஏற்பாடு எனவும் ஆனால், எப்போது இந்த நிலை மாறும் என கூறமுடியாது எனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை இந்நிலையத்தில் கடந்த மாதம் 20 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .