2021 ஜூன் 16, புதன்கிழமை

தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஸ்ரீலங்கா எயார்லைன் விமானம் பாரிஸ் விமான நிலையத்தில் தடுத்துவைப்பு

Kogilavani   / 2011 செப்டெம்பர் 29 , பி.ப. 01:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஸ்ரீலங்கா எயார்லைன் (UL 564) விமானமானது தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடந்த ஒரு வாரகாலத்திற்கு முன்பிருந்தே பாரிஸிலுள்ள டி கோல் விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது என ஸ்ரீலங்கன் எயார்லைன் அறிக்கையொன்றில் கூறியுள்ளது.

இவ்விமானத்தில் பயணம் மேற்கொள்ளவிருந்த பயணிகளுக்கு வேறு விமானங்களில் பயணம் செய்யும் ஒழுங்குகள் செய்து கொடுக்கப்பட்டதாக விமான நிறுவனம் கூறியுள்ளது.

இந்நிலையில், கடந்த  செப்டெம்பர் 23 ஆம் திகதி லண்டன் - கொழும்பு விமானம் பாரிஸுடன் பறந்து அங்கிருந்து இலங்கை வரவிருந்த பயனிகளையும் ஏற்றிக்கொண்டு கொழும்புக்கு வந்ததென அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

விமானத்தின் திருத்த வேலைகளில் இலங்கை பொறியிலயாளர்களும் எயார் பிரான்ஸ் நிறுவனுமும் ஈடுப்பட்டுள்ளன.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .