2021 ஜூன் 16, புதன்கிழமை

விபசாரத்தில் ஈடுபட்ட தாய்லாந்து பெண்கள் நால்வர் கைது

Kanagaraj   / 2015 பெப்ரவரி 11 , பி.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

விபசாரத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் தாய்லாந்து நாட்டைச்சேர்ந்த பெண்கள் நால்வரை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் விசேட விசாரணை பிரிவினர் கைது செய்துள்ளனர்.

அத்துடன், அவர்களுக்கு உடந்தையாக இருந்ததாக கூறப்படும் இந்தியர்கள் அறுவரையும் அப்பிரிவினர் கைது செய்துள்ளனர்.


பம்பலப்பிட்டி கடற்கரை வீதியிலுள்ள சுற்றுலாத்துறை ஹோட்டல் ஒன்றில் வைத்தே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட பெண்கள் தங்கள் நாடும் வாடிக்கையாளர் ஒருவரிடமிருந்து 10 ஆயிரம் ரூபாவை பெறுவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.


அவர்கள் அனைவரும் மிரிஹானையில் உள்ள புனர்வாழ்வு நிலையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதுடன் விரைவில் நாடு கடத்தப்படுவர் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .