2021 ஜூன் 21, திங்கட்கிழமை

வடமாகாண முஸ்லிம்களை டிசம்பர் 26 இல் மீள் குடியேற்ற அரசு நடவடிக்கை

Super User   / 2009 டிசெம்பர் 07 , மு.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

விடுதலைப் புலிகளினால் வடமாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்டிருந்த முஸ்லிம் மக்கள் இந்த மாதம் 26ஆம் திகதி அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்படவுள்ளதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன தெரிவித்துள்ளார்.

நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் பேசுகையில்
மீள்குடியேற்ற, அனர்த்த நிவாரணசேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இதனைக்
கூறினார்.

இந்த மக்களை மீள்குடியேற்றும் நிகழ்வில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவும்
கலந்துகொள்ளவிருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். 

கடந்த 20 வருடங்களாக வடமாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்டிருந்த முஸ்லிம் மக்கள் புத்தளத்திலும், ஏனைய இடங்களிலும் தங்கியிருந்தனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .