2021 ஜூன் 24, வியாழக்கிழமை

கொரிய மொழி பரீட்சை;விதிமுறைகளை மீறிய 60பேர் வெளியேற்றம்

Menaka Mookandi   / 2010 நவம்பர் 01 , மு.ப. 02:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரிய மொழிப் பரீட்சையின் போது பரீட்சை விதிமுறைகளை மீறி நடந்துகொண்டதான குற்றச்சாட்டின் பேரில் சுமார் 60பேர் பரீட்சை நிலையங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்தது.

இந்நிலையில், வெளியேற்றப்பட்ட சந்தேகநபர்களின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன் அவர்கள் மீண்டும் இந்தப் பரீட்சைக்கு தோற்றுவதற்கான வாய்ப்பினையும் இரண்டு வருட காலத்துக்கு இழந்துள்ளதாக மேற்படி முகவர் நிலையம் கூறியது.

தென் கொரியாவில் வேலைவாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ளும் வகையில் குறித்த கொரிய மொழிப் பரீட்சைகள் நாடு முழுவதிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் அந்த பரீட்சைகளுக்காக இதுவரையில் சுமார் 30ஆயிரத்துக்கும் அதிகமானோர் தோற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .