2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

சபுகஸ்கந்தையில் கடத்தப்பட்ட 9 வயது சிறுவன் கண்டியில் மீட்பு

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 01 , மு.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

8 இலட்சம் ரூபாவினைக் கப்பமாகக் கோரி சப்புகஸ்கந்த, மாகொல பகுதியிலிருந்து கடத்தப்பட்ட 9 வயது சிறுவன் ஒருவன், கண்டி - ஹங்குரன்கெத, தலாதுஓயா பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளான்.

இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. வீட்டிலிருந்த போது குறித்த சிறுவனைக் கடத்திச் சென்றுள்ள இரு சந்தேக நபர்கள், சிறுவனை விடுவிப்பதற்காக அவனது தந்தையிடம் 8 இலட்சம் ரூபாவினைக் கப்பமாகக் கோரியுள்ளனர்.

இந்நிலையில், கடத்தப்பட்ட மேற்படி சிறுவனை புபுதுகமை பிரதேசத்தில் வைத்து விக்டோரியா நீர்த்தேக்கத்துக்கு தள்ளியுள்ள கடத்தல்காரர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து குறித்த சிறுவன் நீர்த்தேக்கத்திலுள்ள கல்லொன்றின் உதவியுடன் தனது உயிரைப் பாதுகாத்துக்கொண்டதை அடுத்து அங்கு வந்துள்ள பிரதேசவாசிகளினால் கரையேற்றப்பட்டு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளான்.

சம்பவத்தினை அடுத்து சிறுவனிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கிணங்க, அச்சிறுவன் அவனது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் சம்பவம் தொடர்பான மேலதிக விசரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சருமான பிரஷாந்த ஜயக்கொடி தெரிவித்தார். (M.M)

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .