Gavitha / 2015 ஒக்டோபர் 01 , மு.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

கம்பஹா, கொட்டதெனியாவ 5 வயது சிறுமியான சேயா சந்தவமியை வன்புணர்வுக்கு உட்படுத்தி கொலைச்செய்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் முதலாவதாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களின் DNA மாதிரிகள், பொருந்தவில்லை என்று மினுவாங்கொட நீதவான் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
ஆகையால், அவ்விருவரையும் விடுதலை செய்வதற்கு அவர்களை நீதிமன்றத்தில் இன்று வியாழக்கிழமை ஆஜர்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இந்த சம்பவத்தையடுத்து சந்தேகத்தின் பேரில், முதலாவதாக கைதுசெய்யப்பட்ட இருவரும் நீதிமன்ற உத்தரவின் பேரில் நாளை 2ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
26 Oct 2025
26 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 Oct 2025
26 Oct 2025