Editorial / 2026 பெப்ரவரி 14 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

காதல் என்னும் மகத்தான உணர்வை வார்த்தைகளால் வரைவிலக்கணப்படுத்துவது சற்று கடினமான ஒன்றுதான். காதலுக்கு முதலும் இல்லை முடிவும் இல்லை என்கின்றனர் கவிஞர்கள்
நாம் பிறந்தது முதல் இறக்கும் வரை ஒவ்வொரு தருணத்திலும் காதலை உணர்ந்திருப்போம். ஒரு குழந்தை தன் தாயிடம் உணரும் முதல் விலை மதிப்பற்ற காதல், நடைப்பயில கற்று தரும் அந்த தகப்பனின் காதல், முதல் நாள் பள்ளிக்கு செல்லும் போது அழுகையுடன் அமர்ந்திருக்கையில் கட்டி அனைத்து கதை கூறும் ஆசானின் காதல், உறவிலும், உணர்விலும், உடலிலும் கலந்து ஒட்டி இருக்கும் நட்பின் காதல், சேர்ந்திருக்கும் நேரத்தில் மனதை இழகுப்படுத்தும் செல்ல பிராணிகளின் காதல், என ஒவ்வொரு மனிதனும் வாழ்வில் ஒரு வகை காதலை சுவைத்துக்கொண்டு தான் வருகின்றான்.
இவ் வகையான எத்தனையோ காதல் இருந்தாலும் அனைவராலும் அதிகம் பேசப்படும், மதிக்கப்படும் காதல்தான் பருவ வயதை எய்திய ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே தோன்றிடும் உன்னதமான உணர்வு! இதுவே எல்லோரிடமும் காதலாக புலங்கி வருகின்றது.
ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உள்ள காதல் என்பது தாகமும் குடிநீரும் போல் ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை. இந்த யுகத்தில் நாம் கற்காமலேயே நம்மில் தோன்றும் அபூர்வமான ஒரு விஷயம்தான் காதல். அந்த உணர்வுக்கு மயங்காதவர் எவருமிலர். அதனை விரும்பாதவர் யாரும் இல்லை. அன்பு பாசம் போன்றவைகளுடன் பிணைந்து நிற்பதுவே காதல், அந்த காலத்து காதல் இந்த காலத்து காதல் என பிரித்து பார்க்க நான் விரும்பவில்லை. எந்த காலத்தின் காதலாக இரந்தாலும் காதல் உண்மையானதாக உள்ளதா என்பதே முக்கியம். இருந்தாலும் 2023இல் நாம் வாழ்வதால் உணர்வுடன் கருத்துக்களை பகிர்வதால் இந்த காலத்து காதலைப் பற்றியே கூற விரும்புகின்றேன்.
இந்த காலத்தில் பள்ளி பருவம் தொடங்கி தொழிலுக்கு செல்லும் பாதை வரை காதல் மயப்பட்டு தான் இருக்கின்றது. ஆண் பெண் இருவரிடமும் ஏற்படும் பாலியல் ஈர்ப்பு, அன்பு, அக்கறை, சேர்ந்து வாழ வேண்டும் என்பனவற்றை அடைவதற்கான ஓர் ஆசையினால் காதல் மலர்கின்றது.
தற்காலத்தில் அழகிற்கும் அதிக முக்கியத்துவம் காதல் கொடுத்து வருகின்றது. தினம் தினம் பலரை நம் வாழ்வில் கடந்து செல்கின்றோம் அவர்களில் அழகாக இருப்போர் அனைவரும், எம்மை ஒரு கனம் திரும்பி பார்க்க வைப்பார்கள். இதற்காகவே ஆண்களும் பெண்களும் பல முயற்சிகளை எடுப்பதோடு அதிக கவனம் செலுத்துகின்றனர். அதற்காக பணத்தையும் செலவிடுகின்றனர்.
நான் ஏன் இந்தப் பெண்ணை அல்லது ஆணை காதலிக்கின்றேன் என தனக்குள்ளே கேள்வி கேட்டால் மனசாட்சி சொல்லும் பதில் அவள் அல்லது அவன் அழகாக இருக்கிறான் என்பதுதான் பதிலாக இருக்கும் ஆனால் அதை ஒப்பு கொள்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு.
பெண் ஒருத்தி காதலிப்பவனின் அழகின் உன்னத்தை எதிர்பார்ப்பதும் இரசிப்பதும் அதிகம் ஆனால் அந்த அழகை இழக்கும் வண்ணம் ஆண்கள் குடிப்பதனால் குறுகிய காலத்தில் தொந்தி விழுந்து, முகம் வீங்கி அவலட்சணமான தோற்றத்திற்கு மாற்றமடைவதுடன் தன் வயதை விட முதிர்ந்த தோற்றம் உடையவனாக மாறுகின்றான். இதனால் காதலியின் மனநிலை எவ்வாறு மாறும் அவள் வாழ்க்கை நிலை எவ்வாறு மாறும், பியர் குடித்து தன் வயதான தோற்றத்திற்கு மாறி இருக்கும் காதலனை உறவினர்குளுக்கும் நண்பர் கூட்டத்திற்கும் அறிமுகப்படுத்துவதற்கும் சற்று தயக்கம் கொள்வாள், அவனுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டாலும் அதை அனைவரையும் போல் சமூக வளைத்தளங்களில் பதிவிட்டு பலரின் விருப்புகளையும், கருத்துக்களையும்; அறிந்துக் கொள்ள ஆசைப்பட்டாலும் காதலனின் தோற்றத்தால் ஆசை நிராகரிக்கப்படுகின்றது.
குடிக்கும் காதலன் கட்டி அணைத்து முத்தம் கொடுக்கும் சந்தர்ப்பத்தில் முத்தத்தின் சுவையையும் இன்பத்தையும் அனுபவிக்க தடையாக நாற்றம் காதலியின் குடலை குமட்டி எடுக்கும் அத்தருணம் அவளுக்கு நரகமாய் மனதிற்குள் தோன்றி செல்லும். குடிப்பதற்காக ஏமாந்து இருப்பவன் வாழ்க்கையில் எல்லா விடயங்களுக்கும் ஏமாந்துவிடும் ஒரு கோமாலியாக அவளின் எண்ணங்களில் ஆழமாக பதியும், காதலின் உச்ச மகிழ்ச்சி திருமணத்தின் பின் இல்லற வாழ்வில் ஆண் பெண்ணுக்கும் தரும் இன்ப உணர்வை இருவரும் அனுபவிப்பதாகும்.
அந்நேரத்தில் குடிக்கும் ஆணின் எண்ணங்களில் தொடர்பான சிந்தனைகளே அதிகம் ஓடிக்கொண்டு இருக்கும் இதனால் பெண்ணின் இன்பம் கானல் நீராய் களைந்து விடுகின்றது. இவ்வாறான இன்பங்கள் பெண்ணுக்கு மறுக்கப்பட்டாலும் காதலனுடன் சேர்ந்து சிரிக்கும் பழகும் நேரத்தை பொன்னான நேரங்களாக வாங்கிக்கொள்வாள். ஆனால், குடித்தால் தான் மகிழ்ச்சி என்று இருக்கும் காதலனுக்கு உண்மையான மகிழ்ச்சியையும் அன்பையும் ருசித்து பார்க்க முடியாத துரதிஸ்டசாலிகளாக இருக்கின்றார்கள். இவ்வாறான காரணங்களினால் பெண்ணின் மனம் உடைக்கப்பட்டு அவளின் எதிர்பார்ப்புகளுக்கு தகுந்தவனை தேர்ந்தேடுக்கின்றால். இதனால் காதலும் சற்று கசங்து தான் போகின்றது.
புனித காதலைப் பெற்றும் வண்ணமாக வேலன்டைன் நாள் உலகம் முழுவதிலுமுள்ள மிக நெருங்கிப் பழகும் மக்கள் பலராலும் பெப்ரவரி 14 அன்று கொண்டாடப்படும் ஒரு கொண்டாட்ட நாளாக இருக்கின்றது. இந்நாளில் காதலர்கள் தங்கள் காதலை தெரிவித்துக் கொள்கின்றனர். வாழ்த்து அட்டைகள், இனிப்புகள், மலர்கள் ஆகியவற்றை இந்நாளில் காதலர்கள் பரிமாற்றிக்கொள்கின்றார்கள்.இக் கொண்டாட்டம் பெப்ரவரி 7இல் இருந்து ஒவ்வொரு நாட்களும் ஒவ்வொரு தினங்களாக கொண்டாடப்படுகின்றது.
இவ்வருட காதலர் தினத்தில் அனைவரும் காதல் இரத்து அற்ற உண்மையான காதலை ருசிக்க வேண்டும். அறிவை திறந்து ஏமாறாத ஆண்களை காதலிப்பதற்கு காத்திருக்கும் பெண்களின் ஓர் காதல் மனு இது.
5 minute ago
14 minute ago
19 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
14 minute ago
19 minute ago
1 hours ago