Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 செப்டெம்பர் 03 , பி.ப. 04:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.ஐயூப்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டமையிட்டு, எதிர்க் கட்சிகளிடையே பெரும் அதிர்வலையை உருவாக்கி உள்ளமை காணக்கூடியதாக இருக்கிறது. அரசாங்கத்துக்கு எதிராகக் கூட்டணி அமைக்க அவை முன்வந்துள்ளமை அதனையே காட்டுகிறது.
ரணில் கைது செய்யப்படுவார் என்று அக்கட்சிகள் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை போலும். அதற்கான பிரதான காரணம் அரசியலில் குறிப்பிட்டதொரு மட்டத்துக்கு மேற்பட்டோர் எதைச் செய்தாலும் அவர்கள் கைது செய்யப்படபோவதில்லை என்றதோர் எழுதப்படாத நியதி கடந்த காலங்களில் இருந்து வந்தமையேயாகும்.
சந்திரிகா குமாரதுங்க, மஹிந்த, கோட்டாபய மற்றும் ரணில் ஆகியோர் இவ்வாறு சட்டம் எட்டாத உயர் மட்டத்தில் இருந்து வந்துள்ளனர். கடந்த காலங்களில் எத்தனையோ ஆட்சி மாற்றங்கள் இடம் பெற்ற போதிலும் இவர்களுக்கு எதிராக எவ்வாறான குற்றச்சாட்டுக்கள் இருந்த போதிலும் அவர்கள் கைது செய்யப்படவில்லை.
கோட்டாபயவை கைது செய்யத் தாம் இடமளிக்கப்போவதில்லை என்று நல்லாட்சி அரசாங்கத்தின் நீதி அமைச்சராக இருந்த விஜயதாச ராஜபக்ஷ பகிரங்கமாகவே கூறியதை நாம் மறக்க முடியாது. அதே காரணத்தால் தான் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ரணிலை ஒரு நாள் சிறையில் அடைத்தால் தாம் தமது காதை அறுத்துக்கொள்வதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர அண்மையில் சவால் விட்டார்.
முடியுமானால் ரணிலை ஒரு நாள் சிறையில் வைத்துக் காட்டுங்கள் என்று சர்வஜன
பலய கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீரவும் அண்மையில் சவால்விட்டு இருந்தார்.
ஆனால், கடந்த ஒகஸ்ட் 22ஆம் திகதி ரணில் கைது செய்யப்பட்டதையடுத்து, அந்த எழுதப்படாத நியதி தகர்க்கப்பட்டது. இந்த நியதி தகர்க்கப்பட வேண்டும் என்றும் அரச படைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான போரின்
இறுதிக் கட்டத்தில் இடம்பெற்ற கொடூர சம்பவங்களுக்குப் பொறுப்பானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றுமே தமிழ் மக்களும் கடந்த காலங்களில் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இப்போது அந்த நியதி தகர்க்கப்பட்டு விட்டது. “அடுத்து நாம்” என்றதோர் அச்சத்தை அது சில எதிர்க்கட்சித் தலைவர்கள் மத்தியில் உருவாக்கியிருக்கிறது. ஏனெனில், அவர்கள் பல பாரதூரமான குற்றச் செயல்களுக்காகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.
எனவே, பட்டலந்த சித்திரவதை முகாம் நடத்தியதற்காகவும் மத்திய வங்கி பிணைமுறி ஊழலுக்காகவும் ரணிலை சிறையில் அடைக்க வேண்டும் என்று பல வருடங்களாகக் கூறி வந்த தற்போது எதிர்க்கட்சியில் உள்ளவர்களும் ரணில் கைது செய்யப்பட்டவுடன், அது தவறு என்றும் அது ஜனநாயகத்தின் மீது விழுந்த
பலத்த அடி என்றும் இப்போது கூச்சலிடுகின்றனர்.
இலங்கையில் சட்டம் ஒரு சாராரை நெருங்குவதில்லை என்றும் எனவே சர்வதேச தலையீடு அவசியம் என்று கூறும் தமிழ் தலைவர்களில் சிலரும் அவர்களோடு சேர்ந்துள்ளனர்.
“அடுத்து நாம்” என்ற அச்சமே எதிர்க்கட்சிகளின் பொது கூட்டணியை அமைக்க அவர்களை தூண்டியுள்ளதேயல்லாமல் மக்கள் எதிர்நோக்கும் எந்தவொரு பிரச்சினையும்; அதற்காக அவர்களைத் தூண்டவில்லை. இந்தக் கூட்டணி எதிர்வரும் தேர்தல்களில் அரசாங்கத்தை எதிர்த்துப் போட்டியிடும் கூட்டணியாக ஆரம்பத்தில் அவர்களில் பலர் வர்ணித்தனர்.
ஆயினும், இப்போது அரசாங்கத்தின் சர்வாதிகார போக்கை எதிர்த்துப் போராடுவதற்கான கூட்டணியாக அவர்கள் விவரிக்கின்றனர்.
முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே போன்ற எதிர்க்கட்சிகளின் சில தலைவர்களுக்கு எதிராக நீதிமன்றங்கள் வழங்கிய தண்டனைகள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா போன்றோர்கள் விளக்க மறியலில் வைக்கப்பட்டமை முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ போன்றோர் கைது செய்யப்பட்டமை ஆகியனவும் அவர்கள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் நடவடிக்கைகளைச் சர்வாதிகாரம் என்றழைக்க காரணமாக உள்ளதாகத் தெரிகிறது.
உண்மையில் இவை தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் காலத்தில் திட்டமிடப்பட்ட குற்றச்சாட்டுக்களோ தண்டனைகளோ கைதுகளோ அல்ல. இவை முந்தைய அரசாங்கங்களின் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டவையாகும். ஆயினும், அக்காலத்தில் அரசியல் செல்வாக்கின் காரணமாக அவற்றை முன்னெடுத்துச் செல்ல பொலிஸாரோ சட்ட மா அதிபர் திணைக்களமோ இடமளிக்கப்படவில்லை.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வராவிட்டால் மஹிந்தானந்தவுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று நம்ப முடியாது. நீதிமன்றங்கள் எவ்வளவு நடுநிலையாகச் செயற்பட்டாலும் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் மூலம் அரசாங்கங்கள் வழக்கு விசாரணைகளின் முன்னேற்றத்தைத் தடுக்கலாம்.
உரிய ஆவணங்களை வருடக் கணக்கில் தாமதப்படுத்தலாம். ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கின் போது செய்ததைப் போல் ஒரு வழக்கின் இறுதிக் கட்டத்தில் சட்ட மா அதிபர் வழக்கை வாபஸ் பெறலாம்.
ரத்தன தேரர் ஒரு நபரைக் கடத்திய குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அது தற்போதைய அரசாங்கத்தின் காலத்தில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு அல்ல. ஆனால், அவர் கடந்த வாரம் வரை சுதந்திரமாக நடமாடினார். இது போன்றவர்கள் தொடர்பான கோவைகள் இதுவரை காலமும் கிடப்பில் போடப்பட்டு இருந்தன. இப்போது இக்கோவைகளைக் கையாண்ட அதிகாரிகள் மீதான அரசியல் நெருக்குவாரம் அகற்றப்பட்டுள்ளன. எனவே, அந்த அதிகாரிகள் அந்தக் கோவைகளை முன் நகர்த்த ஆரம்பித்துள்ளனர்.
இதனை அரசியல் பழிவாங்கல் என்று கூற முடியாது. தாம் கையாளும் வழக்குகளை அரசியல் பழிவாங்கல் என்று கூறுவோருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திஸாநாயக்க அண்மையில் எச்சரிக்கை செய்தார். எனவே, எதிர்க்கட்சிகள் கூட்டுச் சேர்வதற்காக அடிப்படையாகக் கொண்டுள்ள வாதமே பிழையானதாகும்.
குற்றமிழைத்தவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுப்பது பழிவாங்கல் என கூறுவதனால் அந்நடவடிக்கைகளை எடுக்காமல் விட்டால் ஊழலைத் தடுக்கலாமா?
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தாம் பதவிக்கு வந்த நாட்களில் உடனடியாக ஊழல் பேர்வழிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை. எங்கே திருடர்களைப் பிடித்து விட்டீர்களா? என்று அப்போது எதிர்க்கட்சியினர் அரசாங்கத்தை ஏளனம் செய்தனர்.
திருடர்களைப் பிடிக்கும் போது முனங்க வேண்டாம் என்று அப்போது ஜனாதிபதி அனுரகுமாரவுக்கு பதிலளித்தார். இப்போது ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் அரசியல்வாதிகள் கைது செய்யப்படும் போது எதிர்க்கட்சிகள் அதனை அரசியல் பழிவாங்கல் என்கின்றன.
பதவிக்கு வர பல ஆண்டுகளுக்கு முன்னர் தாம் பதவிக்கு வந்தால் இந்த குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதாகத் தேசிய மக்கள் சக்தி தலைவர்கள் கூறி வந்தனர். இப்போது அவர்கள் பதவிக்கு வந்து அவற்றை விசாரணை செய்வதற்கான வாய்ப்பையும் வசதிகளையும் உரிய அதிகாரிகளுக்கு வழங்கியிருக்கிறார்கள். அதிகாரிகள் அதன் படி நடவடிக்கை எடுக்கிறார்கள்.
அது எவ்வாறு பழிவாங்கலாகும்?முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் ஏனைய மக்கள் பிரதிநிதிகளுக்கு அவர்கள்
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago