2025 மே 20, செவ்வாய்க்கிழமை

வெலிக்கடையிலிருந்து வவுனியாவுக்கு தமிழினி மாற்றப்பட்ட கதை-2

Super User   / 2012 ஜூலை 16 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


(07.07.2012 ஆம் திகதி வெளியான டெய்லி மிரர் பத்திரிகைக்காக டி.பி.எஸ்.ஜெயராஜ்  எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் இது)

                                                                                                                   பாகம் 2
2012 ஜுலை 2 திங்கட்கிழமை தமிழினியின் வாழ்வில் மறக்க முடியாத நாளாகும். அன்றுதான் 40 வயதான முன்னாள் விடுதலை புலிகளின் மகளிர் அரசியல் பொறுப்பாளாரான இவர் பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் தனது புனர்வாழ்வு காலத்தை தொடங்கினார். இவரது விடுதலைக்கு புனர்வாழ்வு ஒரு முன் நிபந்தணையாகும்.

இவர் தனது ஒரு வருடகால புனர்வாழ்வு பயிற்சியின்போது கணினிப்பயிற்சி பெறுவார். தற்போதைய நிலவரப்படி அவர் அடுத்த வருடம் ஜுலை மாதம் விடுவிக்கப்படத் தகுதி பெறுவர். அதிகாரிகள் திருப்தியடையும் வகையில்  இவர் நல்ல முறையில் நடந்து கொண்டால் புனர்வாழ்வுக் காலம் குறைக்கப்படலாம். இவர் நடத்தை திருப்தியற்றதாக காணப்படின் புனர்வாழ்வு காலம் மேலும் நீடிக்கப்படலாம். என்னவாயினும் அதி சிரேஷ்ட முன்னாள் பெண் புலி முடிவில்லாத சிறைவாசதிற்கு அனுப்பபடாமல் சுதந்திரத்தின் வாசல்படிக்கு வந்துவிட்ட வாய்ப்பை பெற்றுக்கொண்டனமை அதிஷ்டமானதே.

சிவகாமியின் விதவைத் தாய் கடந்தவாரம் கிளிநொச்சியிலருந்து பூந்தோட்டம் வந்து அவரை பார்த்துவிட்டு போனார். நோர்வேயிலுள்ள தமிழினியின் சகோதரருக்கு தமிழினியிடம் தொலைபேசியில் பேச அனுமதி வழங்கப்பட்டது.
கிளிநொச்சியில் வாழும் இன்னொரு சகோதரி அடுத்த வாரம் இவரை பார்க்க வரவுள்ளார். தமிழினிக்கு திருமணமாகிய இன்னொரு சகோதரன் உள்ளார். உணர்ச்சிகள் கட்டு மீறிய நிலையில் தாய்க்கும் மகளுக்கும் இடையில் நடந்த சந்திப்பின்போது தமிழினி, 'என்னை மன்னியுங்கோ' என திரும்பத் திரும்பக் கூறி அழுதார். மகளுக்கு புன்ரவாழ்வு கிடைக்கவுள்ள செய்தி தொலைபேசி மூலம் தெரிவிக்கப்பட்டபோது பேச முடியாமல் போன தாய் தொலைபேசியில் விம்மி விம்மி அழுதார். புனர்வாழ்வின் பின் என்ன செய்யவுள்ளார் என தமினியிடம் கேட்டபோது 'அம்மாவிடம் போய் அவரோடு இருப்பதை தவிர வேறு எதுவும் இல்லை' என்று மட்டும் கூறினார்.

அண்மைக் காலமாக தமிழினியின் சட்டரீதியான நலன்களை கவனித்து வருகின்ற சட்டவுரைஞரான மஞ்சுளா  பத்திரஜாவுடன் பேசும் வசதி தமிழினிக்கு வழங்கப்பட்டது. கஷ்டப்பட்டோருகாக பல வழக்குகளில் இலவசமாக பேசியுள்ள பத்திராஜ, தமிழினிக்காகவும் கட்டணமின்றி தனது சேவையை வழங்கியுள்ளார்.

தமிழினி பூந்தோட்டத்துக்கு மாற்றப்பட்டபின் நோர்வேயிலுள்ள அவரது சகோதரி, சட்டவுரைஞருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கட்டணம் பற்றி கேட்டபோது கட்டண

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X