Super User / 2011 ஏப்ரல் 29 , மு.ப. 09:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சிரேஷ்ட ஊடகவியலாளர் டி.பி.எஸ்.ஜெயராஜ், 23.04.2011 ஆம் திகதிய டெய்லி மிரர் பத்திரிகைக்காக எழுதிய கட்டுரையின்தமிழாக்கம் இது)
ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்த 3 அங்கத்தவர் கொண்ட ஆலோசனை குழுவினால் தொகுக்கப்பட்ட அறிக்கையை வெளியிடுவதுப் பற்றி, ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்துக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்துக்கும் இடையில் இராஜதந்திர இழுபறியொன்று நடைபெறுகின்றது. இது ஒரு புதிய பிரச்சினை அல்ல. தமிழீழ விடுதலை புலிகளுக்கு எதிரான யுத்தம் முடிந்த பின் பான் கீ மூன் இலங்கைக்கு வந்ததிலிருந்து நடந்துக் கொண்டிருக்கின்ற பனிப்போரின் தொடர்ச்சிதான் இது.
செல்வாக்கு மிக்க மேற்கத்தைய நாடுகளும் ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகமும் இலங்கையை பொறுப்புக் கூறும் பொறிமுறை ஒன்றை அமைக்க வைக்கவும் யுத்தத்தின் இறுதிகட்டம் பற்றி விசாரணை நடத்த வைக்கவும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் ஏதோவொரு காரணத்திற்காக இவ்வாறான முயற்சிகளை கடுமையாக எதிர்த்து வந்ததது.
இலங்கை இப்படியான நிலைப்பாட்டை எடுத்திருந்தப் போதும், இந்த பிரச்சினையை கையாள்வதில் இலங்கை அரசாங்கம் ஒரு தெளிவான கொள்கையை கடைப்பிடிக்கவில்லை. ஒருபோது இறுக்கமான நிலைப்பாட்டை எடுப்பதும், இன்னொருபோது மசிந்து போகும் நிலைப்பாட்டை எடுப்பதுமாக அரசாங்கத்தின் செயற்பாடுகள் காணப்பட்டன.
ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமை சபையில் மே 2009 இல் இலங்கை பெரியதொரு இராஜதந்திர வெற்றியை பெற்றுக்கொண்டமை ஒரு முக்கிய நிகழ்வு ஆகும். இலங்கை, தனக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை வெற்றிகரமாக தோற்கடித்ததோடு நிற்காமல், தனக்கு சாதகமான ஒரு தீர்மானத்தையும் நட்டு நாடுகளுடன் உதவியுடன் நிறைவேற்றிக் கொண்டது. இந்த இராஜதந்திர வெற்றியில் மூலக் கர்த்தாவாக இருந்தவர் ஜெனிவா ஐ.நா.வுக்கான இலங்கை தூதுவர் டாக்டர் தயான் ஜயதிலக ஆவார். இருப்பினும் இந்த இராஜதந்திர வெற்றியில் சில வாரங்களின் பின் தயான் ஜயதிலக பதவி விலக்கப்பட்டார். இது ஏன் என்பது புரியாத புதிராகவே உள்ளது.
உற்சாகமிக்கவரான ஜயதிலக்க, தன் பேச்சுவன்மை காரணமாக, சர்வதேச அழுத்தங்களுக்கு பணிந்து போகாமல் இராஜதந்திரம் அரசாங்கங்களில் இலங்கையை கொடிக்கட்டிப் பறக்கச் செய்தவர். பொறுப்புக் கூறும் பொறிமுறையை அமைக்க வைக்க ஐ.நா. மேற்கொண்ட சகல முயற்சிகளையும் இவர் தோற்கடித்தார். ஆனால் இவர் பதவி விலக்கப்பட்டப் பின் எல்லாம் மாறிப்போயிற்று.
ஐ.நா. கலந்துரையாடல் ஒன்றில் உள்நாட்டு பொறுப்புக்கூறும் பொறிமுறை ஒன்றை அமைப்பது பற்றி யோசிப்பதற்கு முதன் முதலாக ஒத்துக்கொண்டவர் இலங்கையின் நியூயோர்க் ஐ.நா. பிரதிநிதி எச்.எம்.ஜி.எஸ். பலிஹகார ஆவார். இவ்வாறு உள்நாட்டு பொறிமுறை ஒன்றை அமைப்பதற்கான சம்மதம் ஐ.நா.வின் அமெரிக்க பிரதிநிதியான சுசான் ரைஸ் என்பவருக்கு வழங்கப்பட்டதாக தெரிகின்றது. பலிஹகாரவையும் இந்த விடயத்தில் குறை கூற முடியாது. அவர் மிகவும் சிக்கலானதொரு நிலைமையில் தந்திரோபாய ரீதியாகவே இதனை செய்தார்.
அப்போது ஐ.நா. பாதுகாப்புச் சபையின் நிகழ்ச்சி நிரலில் இலங்கைப் பற்றிய விவாதத்தையும் சேர்க்கும் முயற்சிகள் மும்முரமாக நடந்து கொண்டிருந்தன. இலங்கையின் நண்பர்களான சீனாவும் ரஷ்யாவும் இங்கு பாதகமான தீர்மானம் எதும் நிறைவேற்றப்படின் 'வீட்டோ' அதிகாரத்தை பயன்படுத்தி அதை தடுக்கும் சாத்தியம் காணப்பட்டபோதும், பாதுகாப்பு சபையில் இலங்கை பிரச்சினை அலசப்படுவதை அவர்களால் தடுத்திருக்க முடியாது.
இந்த நெருக்கடியான நிலைமையில்தான் பலிஹகார உள்நாட்டு பொறுப்பு கூறும் முறைமை பற்றி ஆராய ஒப்புக் கொண்டார். இது நாட்டின் நலனை கருதி மேற்கொள்ளப்பட்ட ஒரு கடினமான தீர்மானம் ஆகும். இதனால் பாதுகாப்பு சபையின் நிகழ்ச்சி நிரலில் இலங்கை சேர்க்கப்படுவதை தவிர்க்கக் கூடியதாக இருந்தது. அதுமட்டுமன்றி சர்வதேச விசாரணை ஒன்றை தொடங்குவதற்கான அழுத்தத்தையும் பலமிழக்கச் செய்தது.
வளைந்துகொடுத்தல்
நியூயோர்க்கிலுள்ள ஐ.நா.வின் இலங்கைப் பிரதிநிதியால் மேற்கொள்ளப்பட்ட வளைந்து கொடுக்கும் போக்கு ஜெனிவாவில் உள்ள ஐ.நா.வின் பிரதிநிதியின் விட்டுக்கொடுக்காத போக்கிலிருந்து பெரிதும் வேறுப்பட்டதாயிருந்தது. இவ்வாறு ஒத்துக்கொண்டமைக்கு நியாயமான காரணங்களிலிருந்தாலும் இந்த சம்மதம் கொழும்பின் மீது அழுத்தத்தை பிரயோகித்து கொண்டிருந்த சர்வதேச சமுதாயத்துக்கு உற்சாகத்தை கொடுத்தது. அத்துடன் இந்த விடயம் தொடர்பில் இலங்கைக்கு தீர்க்கமான உபாயம் ஏதுமில்லை என்பதையும் அத்துடன் இலங்கை தருணத்துக்கு ஏற்றவாறு எழுந்தமானமான உபாயங்களை பின்பற்றும் என்பதையும் வெளிப்படுத்தியது.
பலிஹகாரவினால் வெளியிடப்பட்ட கருத்து எப்படியிருந்தாலும் ராஜபக்ஷவின் அரசாங்கம் உள்நாட்டு பொறுப்புக்கூறும் பொறிமுறை ஒன்றை ஏற்படுத்தமாறு பிரயோகிக்கப்பட்ட அழுத்தங்களுக்கு உடனே விட்டுக் கொடுக்கவில்லை. அது தொடர்ந்தும் இழுத்தடித்தது. இவ்வாறான இழுத்தடிப்பு உபாயம், ராஜபக்ஷ சில நிலைமைகளில் கைக்கொள்ளும் ஒன்றுதான். "சம்மதம் என்று சொல்லிவிட்டு வா, பிறகு பார்க்கலாம்" என்னும் சிங்கள பழமொழி இந்த தந்திரத்தை அழகாக விளக்குகின்றது.
ஆனால், பான் கீ மூனுக்கு இந்த இழுத்தடிப்பு எரிச்சலூட்டியது. அவர் பொறுமை இழக்கத் தொடங்கினார். 2010 மார்ச்சில் ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் இலங்கையில் யுத்தத்தின் இறுதிக் கட்டம் பற்றி ஆராயும் அறிக்கை சமர்ப்பிக்கவும் என ஒரு ஆலோசனை குழுவை நியமிக்கும் தனது தீர்மானத்தை அறிவித்தார்.
இதையிட்டு கொழும்பில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. சட்ட ரீதியான நிலைப்பாட்டை எடுத்துக் கொண்ட இலங்கை, ஐ.நா. பாதுகாப்பு சபையோ அல்லது பொதுச் சபையோ அனுமதி அளிக்காத படியால் ஐ.நா.வின் செயலாளர் நாயகத்துக்கு இவ்வாறான ஆணையத்தை நியமிக்க அதிகாரமோ சட்ட வலுவோ இல்லையென வாதிட்டது.
இது ஐ.நா குழுவல்ல. இது தனது பொறுப்பிலுள்ள ஆலோசனைக் குழு மட்டுமே என பான் கீ மூன் எதிர்வாதம் செய்தார். தனிப்பட்ட ரீதியான மற்றும் உத்தியோகபூர்வமான கருத்துப் பரிமாறல்களின் பின் 2010 இல் அரசாங்கம் ஆணையம் ஒன்றை நியமித்தது. இருப்பினும் அதன் அதிகார வீச்சு குறிப்பான வேண்டப்பட்டதிலிருந்து வித்தியாசமாக இருந்தது. கற்றுக்கொண்ட பாடங்கள், மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு, 2002 இல் ஐ.தே.க. அரசாங்கத்திற்கும் எல்.ரீ.ரீ.ஈ.க்கும் இடையில் மோதல் நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்ட காலத்திற்கும் மே, 2009 இடையில் நடந்த நிகழ்வுகள் பற்றி ஆராய என நியமிக்கப்பட்டது.
மே 6, 2010 இல் இலங்கை அரசாங்கம், மோதல் மற்றும் நல்லிணக்க முயற்சி தொடர்பில் கற்றுக்கொண்ட பாடங்கள் பற்றி அறிக்கை சமர்பிப்பதற்காக ஒரு ஆணையத்தை நிறுவும் என அறிவித்தது. மோதல் நிலைமையில், சர்வதேச ரீதியாக ஏற்கப்பட்ட நடத்தை நியமங்களை மீறியமைப்பற்றி ஆராயப்படும். இவ்வாறான செயல்களுக்கு பொறுப்பான மனிதர்கள் அல்லது குழுக்களையும் இந்த ஆணையம் இனம் காணும் என அரசாங்கத்தின் இணைய தளத்தில் அரசாங்க அறிக்கை ஒன்று கூறியிருந்தது. இவ்வாறான மனிதர்களை இலங்கை குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரிப்பது பற்றியோ அல்லது இவர்களுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது பற்றியோ எதுவும் இந்த அறிக்கையில் கூறப்படவில்லை.
மே 10 இல் ஐக்கிய நாடுகளுக்கான தூதுவர் சுசான் றைஸ், யுத்தம் தொடர்பில் ஒரு ஆணையத்தை அமைக்கும் இலங்கையின் விருப்பத்தை வரவேற்றார். சர்வதேச மனிதாபிமான சட்டத்தை மீறல் தொடர்பிலான பொறுப்புக் கூறும் தன்மையை முன்னெடுப்பதற்கு பெறுமதியான பங்களிப்பை வழங்கும் வகையில் இந்த ஆணையத்திற்கு இருக்க வேண்டிய பல தகைமைகளையும் அவர் பட்டியலிட்டிருந்தார்.
நியமங்கள்
இந்த பட்டியலில் அங்கத்தவர்களின் சுயாதீனம், பாரபட்சமின்மை ஆற்றல்கள், ஒரு சரியான தெளிவான ஆணை, சாட்சியளிப்போருக்கு போதுமான வினைத்திறன்மிக்க பாதுகாப்பு, போதுமான வளங்கள், ஆணையத்தின் சிபாரிசுகளை அரசாங்கம் அக்கறையுடன் கவனத்தில் எடுத்தல் போன்ற நியமிங்கள் அடங்கியிருந்தன.
சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம், சர்வதேச நெருக்கடிக்குழு போன்ற சர்வதேச மனித உரிமை நிறுவனங்கள் ஆரம்பத்திலிருந்த தமது சந்தேகத்தை தெரிவித்திருந்தன. அவை எல்.எல்.ஆர்.சி முன் வாக்கு மூலம் அளிப்பதற்கு விடுக்கப்பட்ட அழைப்பை நிராகரித்துவிட்டன. எல்.எல்.ஆர்.சி., அமைப்பு ரீதியில் குறையுடையது எனவும் செயலாற்றலில் வலுக்குறைந்தது எனவும் நேர்மையாக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டை விசாரிப்பதைவிட சர்வதேச அக்கறையை திசை திருப்புவதாகவே இதன் நோக்கம் உள்ளது எனவும் இந்த நிறுவனங்கள் கருத்துரைத்தன.
மே 28, 2010 இல் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டணை சந்தித்து, அப்போதைய நிலைமையில் உள்நாட்டு பொறுப்புக் கூறும் தன்மைக்கான பொறி முறையாக எல்.எல்.ஆர்.சி. மிகப் பொருத்தமான அமைப்பு என விளக்கினார். அத்துடன் எல்.எல்.ஆர்.சி. ஒரு சுயாதீனமான அறிக்கையை தரும் எனவும் உறுதியாக கூறினார். ஆயினும் மனித உரிமை கண்காணிப்பகம் குற்றங்கள் தண்டிக்கப்படாத சூழலை இலங்கைக்கு தொடரந்தும் வழங்கக்கூடாது என வலியுறுத்தி ஹிலாரி கிளிண்டனுக்கு கடிதம் அனுப்பியது.
இந்த நிலைமையில் எல்.எல்.ஆர்.சி. சில காலமாக தனது விசாரணையை தள்ளிப்போட்டது. பான் கீ மூன் ஓர் ஆலோசனை குழுவை நியமிக்கும் தன் முன்னைய நோக்கத்தை நிறைவேற்றிய போதுதான் இலங்கை தன் அசமந்த போக்கிலிருந்து மீண்டது.
உத்தியோகபூர்வமான ஊடக அறிக்கையில், இந்த ஆலோசனை குழுவின் அதிகாரவீச்சு பின்வருமாறு கூறப்பட்டிருந்தது. 'ஐ.நா.வின் செயலாளர் நாயகம் மே 2009 இல் இலங்கை சென்றிருந்தபோது அவரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் வெளியிட்ட கூட்டறிக்கையில் கூறப்பட்டிருந்த மனித உரிமைகள் மீதான கடப்பாடுகளை செயற்படுத்துவது தொடர்பில் செயலாளர் நாயகத்துக்கு இந்த ஆணையம் ஆலோசனை வழங்கும். இந்தக் குழு, இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மீறல்களின் தன்மை அவற்றின் பாரதூரம் என்பவற்றை கருத்தில் எடுத்து பொறுப்புக் கூறும் செயற்பாடு தொடர்பாக, செயற்படும் விதம், பிரயோகிக்கக் கூடிய சர்வதேச நியமங்கள் மற்றும் ஒப்பீட்டு ரீதியான அனுபவம் என்பனவற்றை ஆராயும். ஏற்றுக் கொண்ட கடப்பாட்டை நடைமுறைப்படுத்துவதில் இக்குழுவின் நிபுணதத்துவத்தை பயன்படுத்த இலங்கையின் அதிகார நிறுவனங்கள் விரும்பினால் இவர்கள் இந்த அறிக்கையை ஒரு வளமாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.
பொறுப்புக் கூறல்
இந்த குழு தன் பணியை செய்யும்போது தொடர்புடைய இலக்கை அதிகாரிகளுடன் ஒத்துழைக்கும் விருப்பத்தை கொண்டுள்ளது. இக்குழு தன்
பணியை தொடங்கி நான்கு மாதங்களுக்குள் தன் ஆலோசனை கூறும் பணியை முடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இலங்கையின் நிலையான சமாதானம் மற்றும் நல்லிணக்கம் என்பவற்றக்கான முக்கிய அத்திவாரமாக பொறுப்புக் கூறும் கடப்பாடு அமைக்கின்றது என செயலாளர் நாயகம் நம்புகின்றார்.
இந்த குழு அமைந்தது மூலம், பொறுப்புக் கூறும் விடயத்தில் ஆக்கப்பூர்வமான பங்களிப்பை வழங்க ஐக்கிய நாடுகளுக்கு இயலக் கூடியதாயிருக்கும் என செயலாளர் நாயகம் எதிர்பார்க்கின்றார்.
இந்த குழுவின் அங்கத்தவர்களாக மார்சுகி தருஸ்மன் (இந்தோனேஷியா) தவைவர், ஜஸ்மின் சூகா (தென் ஆபிரிக்கா) ஸ்டீவன் டட்றேட்னர் (ஐக்கிய அமெரிக்கா) ஆகியோர் இருந்தனர். பெருமதிப்புமிக்க தருஸ்மன் இந்தோனேஷியாவின் முன்னாள் சட்டமா அதிபர் ஆவார். இவர் வட கொரியாவுக்கான விசேட உரிமைகள் ஆய்வாளராகவும் கடமையாற்றியுள்ளார். ஜஸ்மின் சூகா தென்னாபிரிக்காவில் இடம்பெற்ற நிறவெறி கொடுமைகளை ஆய்வு செய்த ஆணையத்தின் உறுப்பினராக இருந்தவர். ஸ்ரெவன் ரட்னர் அமெரிக்க வழக்குரைஞராவார். இவர் மனித உரிமை மீறல்களுக்கு காரணமாக இருந்தவர்களை பொறுப்பேற்க செய்வதில் நாடுகளிடையேயான மோதல்பற்றி புத்தகத்தை எழுதியவர்.
இலங்கை, ஆலோசனைக்குழு அமைக்கப்பட்டதை கடுமையாக எதிர்த்தது. குறிப்பாக தருஸ்மனின் நியமனம் பிரச்சினைக்குரியதாக இருந்தது. ஜனாதிபதி ராஜபக்ஷ, 2006 இல் 15 மனித உரிமை மீறல்கள் பற்றிய குற்றச்சாட்டுக்களை விசாரிக்கவென ஒரு ஆணையத்தை நியமித்திருந்தார்.
இந்த ஜனாதிபதி விசாரணைக் குழுவின் செயல்முறையை அவதானிப்பதற்கு ராஜபக்ஷ சர்வதேச நிபுணர் குழுவொன்றை நியமித்தார். 10 பேர் கொண்ட இந்தக் குழு பிரசித்தமான மனிதர்களாலான சர்வதேச சுயாதீன குழு
2 hours ago
5 hours ago
9 hours ago
CIDDEEQUE Friday, 29 April 2011 10:50 PM
எண்ட ரப்பே என்ன நடக்கப் போகுது !!!!!!!!!!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
9 hours ago