Super User / 2011 ஓகஸ்ட் 02 , பி.ப. 02:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
1977 தேர்தலில் நடந்ததுபோல இப்போதும் நடத்துவிட்டது. 1977 நாடாளுமன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி படுமோசமான தோல்வி கண்டபோது தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி (TULF) நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியாயிற்று. தசாப்தங்களாக நடந்த சண்டையின் பின் தமிழ் மக்களின் கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பு இரண்டு கட்டமாக நடந்த உள்ளூராட்சி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியை மூன்றாம் இடத்துக்கு தள்ளிவிட்டு இரண்டாவது பெரிய அரசியல் கூட்டாக வெளிப்பட்டுள்ளது.
மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராகவும் வந்தபின் அதிகார பகிர்வு பற்றிய கருத்தாடலின் வெவ்வேறு கட்டங்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மாவட்ட மட்ட அதிகார பகிர்வு பற்றி பேசி வருகின்றது. தமிழ் பேசும் மக்கள் வாழும் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ளூராட்சி மன்ற தேர்தல்களில் வெற்றியை வாரி அள்ளியுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு மாகாணமட்ட அதிகாரப் பகிர்வுக்காக செயற்பட்டது.
த.தே.கூட்டமைப்பின் பேச்சாளாரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் இதை அழகாக இவ்வாறு கூறியுள்ளார்: 'கௌரவமான அரசியல் தீர்வுக்காக தமிழ் மக்கள் வாக்காளித்துள்ளனர்". தேர்தல் பிரசாரத்தின்போதும் கட்சி இதையே கூறியுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பும் அரசாங்கத்திற்கும் இடையில் நடந்துவரும் பேச்சுவார்த்தையின் பின்னணியில் பொலிஸ் மற்றும் நிலம் என்பவை தொடர்பில் அதிகாரம் கொண்ட மாகாணசபை தேவை என்பதையே இது உணர்த்தியுள்ளது.'
ஐ.தே.க. படுதோல்வி கண்டுள்ளதை உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் காட்டியுள்ளன. தேர்தல் செயலகத்தின் தகவலின்படி ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 512 இடங்களையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு 183 இடங்களையும் ஐக்கிய தேசிய கட்சி 137 இடங்களையும் ஜே.வி.பி. 13 இடங்களையும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி 12 இடங்களையும் இந்த இரண்டாம் கட்ட தேர்தலில் பெற்றுள்ளன.
தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிட்ட தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி பெற்ற 12 இடங்களையும் சேர்த்தால் இவர்களுக்கான மொத்தம் 195 ஆகின்றது.
ஐ.தே.வின் சரிவு, கட்சியிலிருந்த முடக்கப்பட்ட அதிருப்தியாளர்களை மீண்டும் முடுக்கிவிட்டுள்ளது. பொதுநலவாய நாடாளுமன்ற மாநாட்டுக்காக லண்டன் சென்ற ரணில் மாநாட்டுக்காக லண்டன் சென்ற ரணில் விக்ரமசிங்க நாடு திரும்பும் முன்னரே கட்சியில் தலைமையை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இது தமிழ் மக்களுக்கும் ஒரு செய்தியை கூறுகின்றது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு வடக்கு கிழக்கில் செய்தது போலன்றி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐ.தே.க. கூட்டமைப்பு நாட்டின் ஏனைய பகுதிகளில் இனப்பிரச்சினையை முன்வைத்து பிரசாரம் செய்யவில்லை. எனினும் அதிகாரப் பகிர்வு தொடர்பில் இவர்களின் நிலைப்பாடு நன்கு அறியப்பட்டதே. உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் இந்த இரண்டு பகுதியினையும் மீண்டும் அரசாங்கத்திற்கு கொண்டு வந்துவிட்டுள்ளன.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இப்போது மாவட்ட அடிப்படையிலான அதிகாரப் பரவலாக்கம் பற்றி பேசுவதில்லை. அதன் அமைச்சர்கள் த.தே.கூட்டமைப்புடன் மாகாண மட்ட அதிகாரப் பகிர்வு பற்றி பேசி வருகின்றனர். நாடாளுமன்ற தெரிவுக்குழு பற்றிய அண்மைக்கால பேச்சுகள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. அதிகாரப் பகிர்வு விடயத்தில் இரட்டை வழியை அரசாங்கம் கடைப்பிடிக்கப் போகின்றதா அல்லது த.தே. கூட்டமைப்புடன் பேசி பொதுத் தீர்மானத்துடன் நாடாளுமன்றம் செல்ல போகின்றதா என்பது தெளிவாக தெரியவில்லை.
யுத்தம் முடிந்தபின் நடந்த சகல தேர்தல்ளிலும் அரசாங்க தரப்பினர் பணம், சண்டித்தனம் ஆகியவற்றை பெருமளவில் பயன்படுத்தியமை பற்றிய த.தே.கூட்டமைப்பின் முறைப்பாடு பொலிஸ் அதிகாரத்தை கோருவதன் நியாயத்தை விளக்குவதாக உள்ளது..jpg)
வேறிடத்து அனுபவங்களை காட்டி, குறிப்பாக இந்தியாவைக் காட்டி பொலிஸ் அதிகாரங்கொண்ட மாகாண சபைகள் ஆபத்தானவை என அரசாங்கம் கூறுவது அபத்தமானது. இலங்கை அரசும் அரசாங்கமும் யுத்தம் முடிந்த கையோடு இவ்வகையான தயக்கத்தை கொண்டிருப்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பு புரிந்துக் கொள்ள வேண்டிய தேவையுள்ளது. யுத்தத்தின் பின்னரான நெருக்கீடுகள் இருபக்கமும் இருக்கும். அவை ஒரு பக்கத்தில் மட்டும் காணப்படுபவை அல்ல.
ஒரு சமநிலை எய்தப்படவேண்டும். பொலிஸ் அதிகாரத்தை சிறிது சிறிதாக வழங்குவது பற்றி பேச வேண்டியிருக்கலாம், தமிழர்கள் தாம் தனியாள் தொடர்பான 'தேச வழமை சட்டத்தை' பேண விரும்புகின்றார்களா அல்லது ஒரு மாகாணத்திலுள்ள அரசுடமையான சகல நிலங்களையும் மாகாண அரசாங்கத்திடம் பாரப்படுத்துவதை விரும்புகிறார்களா அல்லது இரண்டையுமே பற்றியா பேசுகின்றனர் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு, உள்ளூராட்சி தேர்தலின் முடிவு உணர்த்தியுள்ளதை கருத்தில் எடுக்குமாறு உலக நாடுகளை கேட்டுள்ளது. இந்த முடிவுகள் புலம்பெயர்ந்தோரின் செயற்பாடுளிலிருந்து கவனத்தை நகர்த்தியுள்ளது.
தமிழ்நாடு மாநில எதிர்க்கட்சியான தி.மு.க., இலங்கையில் தமிழ் பகுதிகளில் சர்வஜன அபிப்பிராய வாக்கெடுப்பு ஒன்றை நடத்த வேண்டுமென கோரியுள்ளது. என்ன நோக்கத்தில் இந்த வாக்கெடுப்பை நடத்த வேண்டுமென இந்த கட்சி கருதுகின்றது என்பது தெளிவாக தெரியவில்லை. முன்பு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவின் முயற்சியினால் தமிழ் நாடு மாநில சட்டசபையில் இலங்கை தொடர்பில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இப்போது உள்ளதைவிட தமிழ் தேசிய கூட்டமைப்பை கூடிய கவனத்தில் எடுக்க வேண்டிய பேச்சுவார்த்தை மூலமான ஒரு தீர்வில் முழுக்கவனம் செலுத்த வேண்டிய தருணம் இது. இன்னும் ஒரு தடவை இந்த நாட்டின் தமிழர்கள் தாம் ஒதுக்கப்பட்டவர்கள் எனக் கருத அனுமதிக்கக் கூடாது.
(தமிழில்: ந.கிருஷ்ணராசா)
3 hours ago
6 hours ago
02 May 2026
azeem Sunday, 21 August 2011 03:13 PM
அரசியல் செய்வது ஒன்றும் இலேசான காரியமல்ல, நாங்கள் எதையும் செய்வோம். எப்படியும் செய்வோம், எங்களுடைய வம்சத்தை காக்க எது வேண்டுமானாலும் செய்வோம்...என்பது போன்றுதான் இருக்கிறது அரசின் நடவடிக்கைகள்..!!!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
02 May 2026