2025 மே 20, செவ்வாய்க்கிழமை

ஐயாவுக்கு அவசர கடிதம்

A.P.Mathan   / 2012 ஜூன் 22 , மு.ப. 08:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


வணக்கம் ஐயா...!


எங்க நலம் பற்றி சொல்வதற்கு ஒன்னும் இல்ல, நீங்க நலமா? உங்க நலத்திற்கு என்ன குறைவு... நல்லா ஏசி ரும்ல குளுகுளுனு இருப்பிங்க, நாங்க ஓசி ரும்ல ஒதுங்கி கிடக்கிறம்...

நாங்க நுவரெலியா டிக்கூட்டில் தோட்ட மக்கள்... உங்களுக்கு எங்களை ஞாபகம் இருக்கிறதா என்று தெரியல, ஆனால் எங்களுக்கு உங்களையும் உங்க முகத்தையும் அப்படி லேசா மறந்திட முடியல.

தவறி உங்க முகத்த நாங்க மறந்தாலும் நீங்க சொன்னிங்களே அந்த சொல்லு... அதான் நீங்க கொடுத்த வாக்குறுதிகளை சொன்னோம், அத மறக்கவே முடியாதுங்க...

அது எப்படிங்க நம்ம மலையக தலைமைகளுக்கு மட்டும் இது முடியுது?

அது நம்ம தலைவர்களுக்கே உள்ள ஒரு தனித்துவம் இல்லையா...

சரி விசயத்துக்கு வருவோம்...

ஐயா கடந்த 2011ஆம் வருஷ கடைசியில எங்கள் தோட்டத்தில நாங்கள் வாழ்ந்த 10 வீடுகளை கொண்ட லயன் தீப்பிடிச்சி எரிஞ்சது. அதுல சுமார் 07 குடியிப்புகள் முற்றாக எரிந்து சாம்பலாகிடுச்சு...

உங்களுக்கே தெரியும் நம்ம மலையக பெருந்தோட்டங்களுல அங்க இங்க மின்சாரத  ஒழுக்கினதால பல லயன்கள் எரிந்து சாம்பலாவது போல எமது குடியிருப்புகளும் எரிஞ்சிது.

ஐயா அன்றைக்கு எரிந்தது எங்க நான்கடி காம்பிராக்கல் மட்டும் இல்ல, மலைக்கு போயி மண்வெட்டியா தேய்ந்து சிறுக சிறுக நாங்க உழைத்து சேர்த்து வைச்சிருந்த பல சொத்துக்களும் தான்.

எங்க வீடுகள் எரிஞ்ச நேரத்துல நீங்களும் உங்கள் பரிவாரங்களும் படை எடுத்து வந்தீங்க. சரி அக்கறையோடதான் நம்ம தலைவர் எங்கள பார்க்க வந்திருக்கிறாருனு தப்பு கணக்கு போட்டோம்...

ஆன இதுலையும் நீங்க எங்கள பகடகாயாக்கி ஓர் அரசியல் காயை நகர்தீனீங்க.

எது எப்படியோ உங்களால எங்களுக்கு ஒரு நிரந்தர தீர்வு கிடைக்க போகுதுனு நினைச்சி நீங்க தற்காலிகமா போய் அந்த ஸ்குல்ல இருங்கனு சொன்னதை வேத வாக்கா நினைச்சி தோட்டத்து ஸ்குல்ல போய் தஞ்சம்; புகுந்தோம்.

பாடசாலை நிர்வாகம் கொஞ்சநாள்ல எங்க பிள்ளைகளின் கல்வியை கவனத்திற்கொண்டு எம்மை வேறோரு இடத்திற்கு போக சொல்லிட்டாங்க. அந்த சந்தர்பத்தில எங்கமேல கருணை காட்டின  தோட்ட முகாமைத்துவம் எங்கள தோட்ட வைத்தியசாலையில் தங்கவைத்தது.

என்ன செய்ய எங்க தலையெழுத்த யாராலயும் மாத்த முடியாதுனு நினைச்சிக்கிட்டே அங்க புதுமனை புகுந்தோம்.

நாட்கள் வேகமா ஓடுனுச்சி. வந்துட்டு போன நீங்க மறுபடியும் வருவீங்கனு நாங்களும் பார்த்துகொண்டே இருந்தோம். ஆனால் நீங்க வர்ர மாதிரி தெரியல...

ஐயா நீங்களே சொல்லுங்க ஐயா... உங்களுக்கு நல்லாவே தெரியும், ஒரு நோய் வந்தா கூட ஓர் ஆளுக்கு இருக்க முடியாத அந்த வைத்தியசாலையில எப்படி குடும்ப குட்டிகளோட இருக்கிறது?

குடிக்க தண்ணி கூட இல்லாம ரொம்ப கஷ்டப்பட்டோம்.

நீங்க வருவீங்க, நிரந்தர தீர்வுகளை தருவீங்கனு காத்திருந்த எங்களுக்கு உங்க சுயரூபம் புரிஞ்சது ஐய்யா. ஒரு விஷயம் இந்த இடத்தில அத எழுதியே ஆகனும்... உங்களுக்கெல்லாம் வாயும், வெட்டி வாக்குறுதிகளும் இல்லாட்டி நன்றியுள்ள மிருகம் தூக்கிட்டு போயுரும்.

உங்களாலையும், தோட்ட நிர்வாகத்தினாலையும் ஏமாற்றப்பட்ட நாங்க ஒரிரு நாட்களில் பழைய குருடி கதவ திறடி என்ற நிலைக்கு தள்ளப்பட்டோம்.

மீண்டும் எங்கள் வீடுகளுக்கு செல்ல முடியாத நாம் சொந்த காரர்களின் வீடுகளில் கொஞ்ச நாள் தங்கினோம். எவ்வளவு காலத்துக்குதான் அவங்களுக்கும் பாரமா இருக்கிறது?

ஆகவே வீடுகளில்; சென்று வாழ முடியாத நிலையில் அவற்றுக்கு அருகிலேயே தற்காலிக கொட்டில்களை அமைத்துகிட்டு வாழ ஆரம்பிச்சோம்.

அந்த வாழ்க்கையும் இப்போது ஒன்பது மாதங்களாகியும் தொடருது.

வெள்ளைக்காரன் கட்டி கொடுத்த அந்த வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகளைதான் உங்களால் கட்டி கொடுக்க முடியவில்லை... எரிந்து போன வீடுகளையாவது சீர் செய்து தரகூடாதா?

மாதம் தவறினாலும் எங்க சந்தா தவறாமல் உங்க தொழிற்சங்கங்களுக்கு வருது... ஆனால் அதனால எங்களுக்கு ஒன்னும் வராது...

வெறுமனே அது ஒரு சந்தா சங்கமாகதான் இருக்குது.

இந்த கொட்டில்ல எங்க பிள்ளைகள் படிக்க முடியல. ஒழுங்கா உக்காந்து சாப்பிடமுடியல... கூர ஒழுகுது. நிம்மதியா தூங்கவும் முடியால. மொத்தத்துல எங்க எதிர்;காலத்துக்கு நாமம் போட்டிட்டிங்க...

இப்படி ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கழுவுற மீன்லையும் நழுவுற மீனா இருந்து இருந்து நீங்க பழகிட்டிங்க இல்லையா?

எங்களால நீங்களும் நாடும் அபிவிருத்தி அடையும், ஆனால் நாங்க இன்னும் அந்த ஓட்ட வீட்டுக்குள ஒடுங்கி கிடக்கனும்... அது தானே உங்க ஆச...

இதையும் ஒரு சாதாரண விடயமாக பார்த்ததாலதான் நாங்க இப்ப இரண்டும் கெட்டான் நிலைமையில இருக்கோம்...

ஐயா..! இதுக்கு மேலயும் எங்கள பற்றி உங்க காதுல ஊதி விளங்க வைக்க முடியாது... உங்க எல்லாருக்கும் காது நல்லாதானே கேட்குது...?!

நன்றிங்க...

இப்படிக்கு


நன்றியுள்ள நுவரெலியா டிக்கூட்டில் தோட்ட மக்கள்



You May Also Like

  Comments - 0

  • hkama Saturday, 23 June 2012 02:51 AM

    வரும் ஆனால் வராது

    Reply : 0       0

    கா.கணேசதாசன் Saturday, 23 June 2012 10:37 AM

    ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றிக்கொண்டே இருப்பார்கள்...

    Reply : 0       0

    கா.கணேசதாசன் Saturday, 23 June 2012 10:40 AM

    நல்ல தலைவர் நல்ல குடி

    Reply : 0       0

    K.Punniyamoorthy Tuesday, 03 July 2012 05:57 PM

    காத்திருப்போம்....... பதிலுக்காக..

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X