A.P.Mathan / 2013 மார்ச் 18 , பி.ப. 02:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
"ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் நீடிப்பது சந்தேகம். நிச்சயமாக தி.மு.க. நீடிக்காது" என்று தி.மு.க தலைவர் கருணாநிதியின் திடீர் அறிவிப்பு சோனியா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களை திடுக்கிட வைத்துள்ளது. "தி.மு.க.தானே. சமாளித்துக் கொள்ளலாம்" என்று இருந்த காங்கிரஸின் நிலைப்பாடு, குறிப்பாக தமிழக காங்கிரஸ் தலைவர்கள் சிலர் அகில இந்திய தலைமைக்குச் சொன்ன தைரியம் காங்கிரஸ் கட்சிக்கு இப்போது மாயமாய் மறைந்துவிட்டது. ஏனென்றால் 18 எம்.பி.க்கள் உள்ள தி.மு.க. மத்திய அரசிலிருந்து வெளியேறினால் 237 எம்.பி.க்கள் மட்டுமே உள்ள கட்சியாக காங்கிரஸ் மாறிவிடும். இந்திய நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைக்கு தேவையான 272 என்ற "மேஜிக்" நம்பருக்கு 35 எம்.பி.க்கள் குறைவு என்ற நிலையில், "எந்த நேரத்திலும் பொதுத்தேர்தல் வரலாம்" என்ற சந்தர்ப்பம் தானாகவே இந்திய அரசியில் வந்து குந்திக் கொள்ளும் நிலை உருவாகி விடும்.1 hours ago
6 hours ago
6 hours ago
விஜயகுமார் Monday, 18 March 2013 03:35 PM
இதை 2009 மே மாதமே செய்திருந்தால் என் மக்கள் கொஞ்சம் பேர் பிளைதிருப்பார்கள்...
Reply : 0 0
ss Thursday, 21 March 2013 01:31 AM
உண்மைதான் நண்பரே! ஆனால் ஒன்று... தமிழக மக்கள் என்றுமே உங்கள் பக்கம்தான்!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
6 hours ago
6 hours ago