Editorial / 2026 மார்ச் 12 , மு.ப. 11:07 - 0 - {{hitsCtrl.values.hits}}

பொதுவாகப் பேருந்துகளில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஆசனங்களை விட்டுக் கொடுப்பது மனிதாபிமானம். ஆனால், மனைவிக்கு இருக்கை கிடைத்த வேகத்தில், தானும் ஒரு 'நோயாளி' போல நடித்து முதியவரிடம் சீட் கேட்ட கணவரின் செயல் மலையகப் பேருந்து ஒன்றில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.
மலையகத்தின் ஒரு குக்கிராமத்தைச் சேர்ந்த அந்த நடுத்தர வயதுத் தம்பதியினர், வைத்தியசாலைக்குச் சென்றுவிட்டு ஊர் திரும்பும் பேருந்தில் ஏறியுள்ளனர். அது அந்த ஊருக்கான ஒரேயொரு 'லாஸ்ட் பஸ்' என்பதால், கால் வைக்கக்கூட இடமில்லாத அளவுக்குக் கூட்டம். இருக்கைகளில் இருந்தவர்களோ பெரும்பாலும் தள்ளாத வயோதிபர்களும் நோயாளிகளுமே.
மனைவி கர்ப்பிணி என்பதால் கஷ்டப்பட்டு நின்றுகொண்டிருப்பதைப் பார்த்த ஒரு முதியவர், மனமிரங்கி எழுந்து தனது இருக்கையை அவருக்குக் கொடுத்தார். மனைவி அமர்ந்ததுதான் தாமதம்... பக்கத்தில் நின்ற கணவர், பக்கத்து இருக்கையில் இருந்த மற்றொரு பெரியவரைப் பார்த்து, "அங்கிள்... எனக்கு ஒரு மாதிரி இருக்கு... எனக்கும் கொஞ்சம் சீட் தர்றீங்களா?" என்று சத்தமாக ஒரு போடு போட்டார்.
அவர் கேட்ட தொனியைக் கண்டு பேருந்தில் இருந்த அத்தனைப் பேரும் "யார்டா இவன்?" என்பது போலத் திரும்பிப் பார்த்தனர். மனைவிக்கோ தர்மசங்கடத்தில் முகம் சிவந்துவிட்டது.
அப்போது பின்னாலிருந்து வந்த ஒரு குரல் அந்தப் பேருந்தையே அதிர வைத்தது. "ஏன் அங்கிள்... உங்களுக்கும் என்னாச்சும் விசேஷமா? உங்களுக்கு எப்ப 'பேபி' பிறக்கப்போகுது?" என்று ஒரு இளைஞன் நக்கலாகக் கேட்க, ஒட்டுமொத்தப் பேருந்தும் ஓவெனச் சிரித்தது.
விளைவு? அந்தத் தம்பதியினர் ஊர் வந்து இறங்கும் வரை, மற்ற பயணிகள் இதையே 'சைடிஷ்' ஆக வைத்து மென்று தள்ளினர். பாவம் அந்தக் கணவர், இறங்கும் வரை தலையை நிமிர்த்தவே இல்லை!
5 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago