2021 மே 06, வியாழக்கிழமை

‘அடிமை தேசமானது’

R.Maheshwary   / 2021 ஏப்ரல் 19 , மு.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்கம் இந்த நாட்டை அடிமை தேசமாக மாற்றியுள்ளதென தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, அரசாங்கம் நிதி பயங்கரவாதம் மற்றும் நிதி பிரிவினைவாதம் பொருளாதார பயங்கரவாதம் மற்றும் பொருளாதார பிரிவினைவாதம் ஆகியவற்றை மேற்கொள்ள அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்றார்.

ஹம்பாந்தோட்டையில் நேற்று (18) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து தெரிவித்த அவர்,

துறைமுக நகர திட்டத்தின் மூலம் நமது நாட்டை வெளிநாட்டு சக்திகளுக்கு அடிமை நாடாக மாற்ற இந்த அரசாங்கம் முழுமையான திட்டங்களை வகுத்துள்ளதாகத் தெரிவித்த அவர், அதற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி  உயர்நீதிமன்றத்துக்கு சென்றுள்ளதென்றும் அதற்கு மேலதிகமாக அரசாங்கத்தின் இத்திட்டங்களைத் தோல்வியடையச் செய்ய எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

அரசாங்கம் நாட்டு மக்களின் இறையாண்மை முழுமையாக காட்டிக் கொடுப்பதற்காக அரசாங்கம் அரசியலமைப்பை அப்பட்டமாக  மீறி அச்​செயற்பாட்டை முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்த அவர், இந்த அரசாங்கத்தின் பிரிவினைவாத செயற்பாடுகள் புதிய வடிவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் அதனூடாக மோசடி நிதி முதலாளித்துவத்தை கட்​டியெழுப்ப அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ள​தென்றார்.

 அரசாங்கத்தின் இந்த வெறித்தனமான செயன்முறைக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி வேகமாக நிபந்தனையின்றி முன்னேறி வருவதாகவும் எனவே உண்மையான முற்போக்கு சக்திகளை அதனுடன் இணைவதற்கு அழைப்பு விடுப்பதாகவும் தெரிவித்தார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .