2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

அதிகாரிகளின் அறைகளில் கையில்லாத ரவிக்கைகள் அணியத் தடை

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 28 , மு.ப. 02:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றத்தில் அரச அதிகாரிகள் அமரும் விசேட அறைகளுக்கு, கையில்லாத ரவிக்கைகளை அணிந்து கொண்டு பெண்கள் பிரவேசிப்பதை, நாடாளுமன்ற நிர்வாகம் தடைசெய்துள்ளது.   இந்தத் தடை தொடர்பில், நாடாளுமன்றத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கும் நாடாளுமன்ற கூட்டங்களில் கலந்துகொள்ள வரும் அரச அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த பிரதி படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாந்து, நாடாளுமன்றத்தில் அணிய வேண்டிய ஆடைகள் தொடர்பாக விசேட குறியீடுகள் இருக்கின்றன. அதற்;கமைய சம்பந்தப்பட்ட அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.  

அதன்பிரகாரம், நாடாளுமன்ற விசேட அறைகளுக்கு பெண்கள் பிரவேசிக்கும் போது, சேலை மற்றும் நீண்ட கையுள்ள மேல் ஆடைகளை அணிவது அவசியமாகும்.  

தேசிய உடை இல்லா விட்டால் நீண்ட கைகளை கொண்ட அடைகளை ஆண்கள் அணிவது அவசியமாகும் என்றும் அறிவித்துள்ளார்.  

புதிய அரச அதிகாரிகளுக்கு நாடாளுமன்ற ஆடை குறியீடுகள் சம்பந்தமாக போதிய தெளிவு இல்லாதமை காரணமாக கடந்த காலத்தில் சில சிக்கல்கள் ஏற்பட்டது. இதனை நிவர்த்திக்கும் நோக்கிலேயே, திடீரென இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். ( நன்றி: பி.பி.சி)  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .