S.Renuka / 2025 டிசெம்பர் 04 , மு.ப. 11:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டை சூறையாடிய டிட்வா புயல், மண்சரிவு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 22 மாவட்டங்களில் உயிரிழந்தவர்களுக்கு இறப்புச் சான்றிதழ்களை வழங்குவதற்கான புதிய வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
கண்டி, நுவரெலியா, பதுளை, குருநாகல், மாத்தளை, கேகாலை, கம்பஹா, முல்லைத்தீவு, அனுராதபுரம், கொழும்பு, யாழ்ப்பாணம், பொலன்னறுவை, மன்னார், புத்தளம், இரத்தினபுரி, மொனராகலை, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, கிளிநொச்சி, வவுனியா மற்றும் களுத்துறை ஆகிய நிர்வாக மாவட்டங்களிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் வெளியிடப்பட்டது.
மேற்கூறிய மாவட்டங்களில் காணாமல் போனவர்களுக்கு மரணச் சான்றிதழ்களை வழங்கும் நோக்கத்திற்காக, 2010ஆம் ஆண்டு 19ஆம் எண் இறப்பு பதிவு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தின் பகுதி 11இன் பிரிவு 9 இன் விதிகளின்படி, 2025 நவம்பரில் ‘டிட்வா’ சூறாவளியின் தாக்கத்தால் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ‘தேசிய பேரிடர் பகுதிகள்’ என்று அறிவித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
17 minute ago
22 minute ago
22 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
22 minute ago
22 minute ago
36 minute ago