2025 டிசெம்பர் 04, வியாழக்கிழமை

புட்டினின் இந்திய பயணம்: 10 முக்கிய அம்சங்கள்

S.Renuka   / 2025 டிசெம்பர் 04 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஷ்ய ஜனாதிபதி புட்டின் இன்று வியாழக்கிழமை (04) புதுடில்லி வந்தடைவார் என இந்திய அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

குறித்த விஜயத்தின்போது, 

* டில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் நாளை வெள்ளிக்கிழமை (04) நடைபெறும் 23ஆவது ஆண்டு இந்தியா-ரஷ்யா உச்சி மாநாட்டில் புட்டின் கலந்து கொள்வார். அங்கு அவருக்கு முறைப்படி வரவேற்பு அளிக்கப்படும். இதைத் தொடர்ந்து, அதே இடத்தில் பிரதமர் மோடியுடன் மதிய உணவிலும் கலந்து கொள்வார்.

* பின்னர் ஜனாதிபதி திரவுபதி முர்முவின் அரசு விருந்தில் கலந்து கொள்வதற்கு முன்பு, புட்டின் ராஜ்காட்டுக்குச் சென்று ரஷ்ய அரசு நடத்தும் தொலைக்காட்சி சேனலின் தொடக்க விழாவிலும் கலந்து கொள்வார். நாளை  வெள்ளிக்கிழமை (04) இரவு 9.30 மணிக்குள் புடின் தனது இந்தியப் பயணத்தை முடித்து கொண்டு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

* இதற்கிடையே கடந்த 2.5 ஆண்டுகளாக நடந்து வரும் உக்ரைன் மோதல் குறித்தும் விவாதம் நடைபெறலாம். ரஷ்யாவும் உக்ரைனும் ராஜதந்திரம் மூலம் பிரச்னைகளை தீர்க்க வேண்டும் என்று இந்தியா எப்போதும் உறுதியாக கூறி வருகிறது. இந்தியாவும் ரஷ்யாவும் பல பாதுகாப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திடலாம்.

* ரஷ்யா கூடுதல் எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்புகளையும் வழங்கக்கூடும், இது ஆப்பரேஷன் சிந்தூர்போது, முக்கிய பங்கு வகித்தது. பாதுகாப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்கு முன்பு, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ரஷ்ய சகா ஆண்ட்ரி பெலோசோவுடன் டில்லியில் நடைபெறும் 22ஆவது இந்தியா-ரஷ்யா அரசுகளுக்கிடையேயான இராணுவ அமைச்சர்கள் கூட்டத்திற்கு இணைந்து தலைமை தாங்குவார்.


* மருந்து, விவசாயம், உணவுப் பொருட்கள் மற்றும் நுகர்வோர் பொருட்கள் ஆகிய துறைகளில் ரஷ்யாவிற்கான இந்திய ஏற்றுமதி கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


* ரஷ்யாவிலிருந்து இந்தியா ஆண்டுதோறும் பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்குவது சுமார் 65 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும், அதே நேரத்தில் இந்தியாவிலிருந்து ரஷ்யாவின் இறக்குமதி சுமார் 5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X