2025 டிசெம்பர் 04, வியாழக்கிழமை

கொட்டாவ பேருந்து நிலையத்தில் சிக்கித் தவித்த சிறுவன்

R.Tharaniya   / 2025 டிசெம்பர் 04 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொட்டாவ பிரதான பேருந்து நிலையத்தில் சிக்கித் தவித்த எட்டு வயது சிறுவன் புதன்கிழமை (03) அன்று அதிகாலையில் பொலிஸாரினால் பொறுப்பேற்க்கப்பட்டார்.

குறித்த சிறுவனது பெற்றோர், பாதுகாவலர்கள் பற்றிய எந்த தகவலையும் அவனால் வழங்க முடியவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர். இருப்பினும், பொலிஸ் அதிகாரிகளால் சிறுவனுக்கு உணவு உட்பட பராமரிப்பு மற்றும் கவனிப்பு வழங்கப்பட்டது.

குழந்தையை ஹோமாகம நீதவான் முன் ஆஜர்படுத்தி, நீதிமன்ற உத்தரவின் பேரில் அடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X