S.Renuka / 2025 டிசெம்பர் 04 , பி.ப. 12:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேசிய காவல்படை வீரர்கள் மீதான துப்பாக்கிச்சூடு சம்பவத்தைத் தொடர்ந்து 30க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பயண தடையை விரிவுப்படுத்த ட்ரம்ப் நிர்வாகம் பரிசீலித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சமீபத்தில், அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அருகே அமெரிக்க தேசிய காவல் படை வீரர்கள் மீது ஆப்கனை சேர்ந்த ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். இந்த சம்பவத்தை அடுத்து, ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்களின் அனைத்து குடியேற்ற கோரிக்கைகளை கால வரையின்றி நிறுத்தி வைத்து அமெரிக்கா உத்தரவிட்டது. க்ரீன் கார்டு வைத்து இருப்பவர்களின் ஆவணங்களை மறுபரிசீலனை செய்ய அதிபர் டிரம்ப் உத்தரவிட்டு இருந்தார்.
ஏற்கெனவே அமெரிக்காவுக்குள் செல்ல 19 நாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. தற்போது 19 நாடுகளில் இருந்து அதன் பயண தடையை 30க்கு மேற்பட்ட நாடுகளாக விரிவுபடுத்த டிரம்ப் நிர்வாகம் பரிசீலித்து வருகிறது. உள்நாட்டு பாதுகாப்புச் செயலாளர் கிறிஸ்டி நோயம், பயணத்தடையை 32 நாடுகளுக்கு அதிகரிக்க பரிந்துரைத்து இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: நமது முன்னோர்கள் இந்த தேசத்தை ரத்தம், வியர்வை சிந்தி கட்டியெழுப்பினர். வெளிநாட்டு படையெடுப்பாளர்கள் நமது ஹீரோக்களைக் கொல்வதற்கோ, நமது கடின உழைப்பால் சம்பாதித்த வரி டாலர்களை உறிஞ்சுவதற்கோ அல்லது அமெரிக்கர்களுக்குக் கிடைக்க வேண்டிய சலுகைகளைப் பறிப்பதற்கோ அல்ல என கூறியுள்ளார்.
16 minute ago
21 minute ago
21 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
21 minute ago
21 minute ago
35 minute ago