2026 ஜனவரி 09, வெள்ளிக்கிழமை

’அன்று சண்டி இன்று நொண்டி’

Freelancer   / 2026 ஜனவரி 07 , மு.ப. 01:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்க்கட்சியில் இருக்கும்போது, சண்டியர்களாக செயற்பட்டவர்கள் அரசாங்கத்திற்கு வந்ததும் நொண்டியர்களாக மாறிவிட்டனர் என்று புதிய ஜனநாயக முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க் கிழமை (06) அன்று  நடைபெற்ற   விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
 
வெனிசுலா பிரச்சினை 2018 ஆம் ஆண்டு காலத்தில் வந்த போது தற்போது அரசாங்கத்தில் இருப்பவர்கள் அப்போது அமெரிக்கத் தூதரகத்திற்கு முன்பாக சென்று சுற்றிவளைத்தனர். ஆனால் இப்போது அமெரிக்கத் தூதரகத்திற்கு முன்னால் சென்று இவர்களின் வேறு தரப்பினரே சுற்றி வளைத்தனர். இவர்கள் எதிர்க்கட்சியில் இருக்கும் போது சண்டியர்களாகவும்  அரசாங்கத்தில் இருக்கும் போது நொண்டியர்களாகவும் இருக்கின்றனர். இவர்களால் இப்போது எதுவும் பேசமுடியாமல் இருக்கின்றனர்.

இதேவேளை, கல்வி மறுசீரமைப்பு விடயத்தில் நாங்கள் பிரதமரை அவமதிக்கும் வகையில் எதனையும் கூறப் போவதில்லை. இந்த பிரச்சினையில் தவறு எங்கே நடந்துள்ளது என்பதல்ல. உதாரணத்திற்குச் சர்ச்சைக்குரிய மருந்து ஊசிகளை கெஹலிய ரம்புக்வெல்ல காலத்தில் இறக்குமதி செய்திருந்தாலும் அவற்றை நோயாளர்களுக்குச் செலுத்தியவர் அவரல்ல. ஆனால், சிறைக்கு அவரே சென்றார். அதேபோன்று, தான் பிரதமருக்கும் இதில் இருந்து பொறுப்புக் கூறுவதில் இருந்து தப்பிக்க முடியாது. 
 
நான் சிறைக்குச் சென்ற விடயத்திலும் அதிகாரிகளே வங்கியில் இருந்து பணத்தைப் பெற்றனர். நானல்ல. இறுதியில் சிறைக்குச் சென்றது நானே. அது போன்றுதான் பிரதமருக்கு இதில் இருந்து விலகிச் செல்ல முடியாது. நிச்சயமாக கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் சாமர சம்பத்துக்குத் தண்டனை வழங்கப்படுவதைப் போன்று பிரதமருக்கும் தண்டனை கொடுக்கப்பட வேண்டும். இல்லையென்றால் அவர் பதவி விலக வேண்டும்.

அதேபோன்று பொலிஸார் பற்றிக் கூறும்போது, முன்னாள் சபாநாயகர் மதுபோதையில் வாகனம் செலுத்திய சம்பவம் தொடர்பில் பொலிஸ் அதிகாரியொருவருக்கு எதிராகவே நடவடிக்கை எடுக்கப்பட்டது. அத்துடன் கஞ்சா பிடிக்கச் சென்ற பொலிஸ் அதிகாரியொருவருக்கு எதிராகவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்று பல சம்பவங்கள் நடந்துள்ளன. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .