2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

அபிவிருத்திக்கான முதலீடுகளை ஆராய முஸ்தீபு

Kogilavani   / 2016 டிசெம்பர் 30 , மு.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

கெலும் பண்டார

அபிவிருத்தி (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம், 8 மாகாண சபைகளிலும் தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில், அபிவிருத்திகளுக்கான முதலீடுக்கள் தொடர்பில் ஆராய்வதற்காக, முன்னைய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையை மீள ஆராய வேண்டும் என்று, அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி கோரியுள்ளது.

முதலீடுகள் குறித்தான அனுமதிகளை வழங்குவதற்கான முடிவுகளை எடுப்பதற்கு, இரண்டு சக்திவாய்ந்த அமைச்சர்களை உருவாக்குவதே, கடந்த ஆட்சியில் சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலமாகும்.

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா, முதலீட்டு முன்மொழிவுகளை விரைவுபடுத்துவதற்கான பரிந்துரை வழங்குவதற்காக, அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தலைமையிலான செயற்குழுவொன்று உருவாக்கப்பட்டது என்று தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், "நானும் அமைச்சர் பைஸர் முஸ்தபாவும், அந்தச் செயற்குழுவில் பணியாற்றினோம். அந்தச் செயற்குழுவும், இதே காரணத்துக்காகவே நியமிக்கப்பட்டது. வழக்கமான நடைமுறைத் தாமதங்களைக் குறைத்து, முதலீட்டு முன்மொழிவுகளை விரைவுபடுத்தவதே அந்த நோக்கமாகும். தற்போதைய சட்டமூலத்தைத் தயாரித்தோர், அச்சட்டமூலத்தை மீள ஆராய்வது சிறப்பானது.

"முதலீட்டு முன்மொழிவுகளுக்கான ஒரே மையமாக அமைவதே, அச்சட்டமூலத்தின் நோக்கமாகும். மாறாக, தற்போதைய சட்டமூலத்தைப் போன்று, சுப்பர் அமைச்சரொருவரை உருவாக்குவது, அதன் நோக்கம் கிடையாது" என்று குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .