J.A. George / 2022 ஜனவரி 12 , பி.ப. 01:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (12) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அமெரிக்கப் பிரஜையான பசில் ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினர் பதவியோ அல்லது அமைச்சுப் பதவியோ வகிக்க முடியாது என தெரிவித்து உலப்பனே சுமங்கல தேரர் தாக்கல் செய்த வழக்கிலேயே நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
நீதியரசர்களான சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, இது தொடர்பான நோட்டீஸை கையளிக்குமாறு உத்தரவிடப்பட்டது.
அத்துடன், குறித்த மனுவை வரும் 7ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
3 hours ago
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago
3 hours ago