Freelancer / 2026 ஜனவரி 09 , பி.ப. 09:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்புலுவாவ மலையில் மேற்கொள்ளப்படும் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சுற்றாடல் அமைச்சு, மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு அறிவித்துள்ளது.
அம்புலுவாவ சுற்றாடல் வலயத்தின் முகாமைத்துவத்தில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து விசாரணை செய்வதற்காக சுற்றாடல் அமைச்சைப் பிரதிநிதித்துவப்படுத்தி விசேட நிபுணர் குழுவொன்றை நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சுற்றாடல் அமைச்சின் ஆலோசனைக்கமைய மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அதிகாரிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து அம்புலுவாவ சுற்றாடல் வலயத்தை அவதானிப்பதற்காக எதிர்வரும் நாட்களில் கள விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. R
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago