2026 ஜனவரி 11, ஞாயிற்றுக்கிழமை

அநுராதபுரத்தில் மற்றுமொரு மகளும் உயிரிழப்பு

Freelancer   / 2026 ஜனவரி 10 , பி.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

அண்மையில் அநுராதபுரம், கலென்பிந்துனுவெவ பிரதேசத்தில் குடும்பஸ்தர் ஒருவர் வீடொன்றுக்கு தீ வைத்த சம்பவத்தில், குறித்த குடும்பஸ்தரும் மகளும் மனைவியும்  உயிரிழந்திருந்தனர்.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 15 வயது மகளும் சிகிச்சைப் பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.

கலென்பிந்துனுவெவ, நுவரகம் கொலனி, படிக்காரமடுவ பிரதேசத்தில் கடந்த 06 ஆம் திகதி இடம்பெற்ற இந்த சம்பவத்தில், தீ வைத்த 43 வயதான குடும்பஸ்தரும், அவரது 13 வயது மகள் மற்றும் 36 வயதான மனைவி ஆகியோர் அன்றைய தினமே உயிரிழந்திருந்தனர்.

இந்த நிலையில், அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மற்றுமொரு மகளும் இன்று உயிரிழந்துள்ளார். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .