2026 ஏப்ரல் 03, வெள்ளிக்கிழமை

அமர்ந்த நிலையில் என்புக்கூடு மீட்பு

Freelancer   / 2025 செப்டெம்பர் 06 , மு.ப. 07:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். செம்மணி மனிதப் புதைகுழியில் கால்கள் மடிக்கப்பட்டு அமர்ந்த நிலையில் என்புக்கூட்டுத் தொகுதி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

செம்மணி மனிதப் புதைகுழியில் அகழ்வுப் பணிகளின் போது நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை குவியலாக எட்டு மனித என்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டிருந்தன. அவற்றைச் சுத்தம் செய்யும் பணிகள் நேற்று (05) முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது, அவற்றுள் 227 என்று இலக்கமிடப்பட்ட என்புக் கூட்டுத் தொகுதி கால்கள் மடிக்கப்பட்டு அமர்ந்த நிலையில் மீட்கப்பட்டது.

இது தொடர்பில் தெளிவான விளக்கத்தைப் பெற யாழ். பல்கலைக்கழக இந்து நாகரிகத் துறை மூத்த விரிவுரையாளர் ரமணராஜா புதைகுழிப் பகுதிக்கு அழைக்கப்பட்டு, அது தொடர்பான அவரது அவதானிப்புகள், விளக்கங்கள் கோரப்பட்டன.

அவர் தனது அவதானிப்பின்படி, குறித்த மனித என்புத் தொகுதி இந்து முறைப்படி முறையாக அடக்கம் செய்யப்பட்டமைக்கான சான்றுகள் காணப்படவில்லை எனவும், என்புக்கூட்டின் கைகள் காணப்படும் நிலைமை உள்ளிட்ட காரணிகளால் அது முறையாக அடக்கம் செய்யப்பட்ட என்புக்கூடு இல்லை எனவும் தெரிவித்தார்.

அதையடுத்து அது தொடர்பான விவரமான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு யாழ். மேலதிக நீதிவான் செ.லெனின்குமார் உத்தரவிட்டார். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .