Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kamal / 2019 மார்ச் 21 , மு.ப. 02:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்க நிதி நிறுவனமொன்றின் ஊடாக, இலங்கையில் காணிகளை ஆக்கிரமிக்கும் முயற்சிகள் இடம்பெறுவதாகக் குற்றஞ்சாட்டும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச எம்.பி., அதற்குத் தற்போதைய அரசாங்கம் ஆதரவளிக்கின்றது எனவும் தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள தேசிய சுதந்திர முன்னணியின் அலுவலகத்தில் நேற்று (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு, மேலும் கருத்துரைத்த அவர், உள்நாட்டவர்களின் காணி உரிமையை இல்லாதொழிக்கும் வகையில், சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவருவதற்கு முயற்சித்தமையாலேயே ரணில் விக்கிரமசிங்கவை, பிரதமர் பதவியிலிருந்து நீக்குவதற்குத் தீர்மானித்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருந்தார் எனவும் அவர் தெரிவித்தார்.
குறித்த திருத்தங்களை மீண்டும் அமைச்சரவை அனுமதியுடன் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் முயற்சிகள் இடம்பெறுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேற்படி, சட்டங்களில் ஒன்றான அரச காணி சட்டத்தின் கீழ் இந்நாட்டின் சகல அரச நிறுவனங்களின் காணிகளும் பதிவு செய்யப்படுமெனத் தெரிவித்த அவர், காணி விசேட அலுவல்கள் சட்டத்தின் மூலம் உள்நாட்டவரின் காணி உரிமைகள் பறிபோகும் என்றார்.
இவ்விரண்டுமே இலங்கையின் எதிர்காலத்தை தீர்மானிக்கக் கூடியவை எனவும், அமெரிக்க நிறுவனத்தின் தேவைக்காகவே, இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
குறித்த நிறுவனமானது அமெரிக்காவின் நேட்டோ அமைப்புக்கு நிகரானதெனவும், நேட்டோ அமைப்பு ஆயுத செயற்பாடுகள் மூலம் பிற நாடுகளில் தலையீடு செய்வது போன்று மிலேனியம் நிறுவனம், பொருளாதார ரீதியாக மற்றைய நாடுகளை ஆக்கிரமிக்கும் அமைப்பாக செயற்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், அதற்கான அலுவலகம் அலரி மாளிகையில் முகவரியின்றி இயங்கிவருகின்றதென குற்றஞ்சாட்டிய அவர், இந்தச் சட்டங்கள் அமுலுக்கு வந்தால், வெளிநாட்டவர்களுக்கு இந்நாட்டில் இலகுவாகக் காணிகளைக் கொள்வனவு செய்வதற்கான வாய்ப்புக் கிட்டும் என்றார்.
31 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
1 hours ago
2 hours ago