Editorial / 2026 மார்ச் 30 , பி.ப. 12:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உப்பாலி பன்னிலகே, பாராளுமன்ற உறுப்பினராகப் பதவி வகிக்கத் தகுதியற்றவர் என அறிவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட ரீட் மனுவை எதிர்வரும் மே மாதம் 13 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (மார்ச் 30) தீர்மானித்தது.
இந்த மனுவை சமூக மற்றும் அரசியல் ஆர்வலர் ஓஷால ஹேரத் தாக்கல் செய்துள்ளார். இதில் முதலாம் பிரதிவாதியாக அமைச்சர் உப்பாலி பன்னிலகேவும், ஏனைய பிரதிவாதிகளாக பாராளுமன்றச் செயலாளர் நாயகம் குஷானி அனுஷா ரோஹணதீர, ருகுணு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சுஜீவ அமரசேன, ருகுணு பல்கலைக்கழகம் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
உப்பாலி பன்னிலகே பாராளுமன்ற உறுப்பினராக அறிவிக்கப்பட்டு, பின்னர் அமைச்சராக நியமிக்கப்பட்ட காலப்பகுதியில், அவர் ருகுணு பல்கலைக்கழகத்தின் ஊழியராகத் தொடர்ந்தும் பணியாற்றி வந்ததாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார். அரச ஊழியராகப் பணியாற்றும் ஒருவர் பாராளுமன்ற உறுப்பினராக இருக்க முடியாது என்ற அடிப்படையில், அவரது பதவியை இரத்து செய்யுமாறு மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, வழக்கில் மூன்றாவது பிரதிவாதியாகக் குறிப்பிடப்பட்டுள்ள ருகுணு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர், தனக்காக ஒரு சட்டத்தரணியை நியமிக்க வேண்டியுள்ளதாக நீதிமன்றில் தெரிவித்தார். இதனை ஏற்றுக்கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றம், விடயங்களை ஆராய்வதற்காக வழக்கை மே 13 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.
மனுதாரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி உதித இகலஹேவ மற்றும் சட்டத்தரணி என்.கே. அசோக்பரன் ஆகியோர் முன்னிலையாகினர். அமைச்சர் பன்னிலகே சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ஹர்ஷ பெர்னாண்டோ மற்றும் சட்டத்தரணி யோஹான் குரே ஆகியோர் முன்னிலையாகினர்.
21 minute ago
34 minute ago
49 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
34 minute ago
49 minute ago
2 hours ago