2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

அமைச்சர்கள் இருவர் விட்டோடினர்

Kogilavani   / 2017 ஜனவரி 06 , மு.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.நிரோஷினி

ஊடகவியலாளர்களின் சரமாரியான கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல், திணறிப்போன அமைச்சர்கள் இருவர் கேள்விநேரம் முடிவடைவதற்கு முன்னரே மிகவேகமாக எழுந்து, தங்களுக்கு முன்பாக இருந்த கோவைகளையும் அள்ளியெடுத்துக்கொண்டு, வெளியேறிவிட்டனர். ஹம்பாந்தோட்டை துறைமுக விவகாரம் தொடர்பில், நிதியமைச்சின் கேட்போர் கூடத்தில், விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று நேற்று இடம்பெற்றது.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில், அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம, நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகியோர் பங்கேற்றிருந்தனர். இந்த ஊடகவியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்கள், அமைச்சர்கள் இருவரிடமும் சரமாரியாகக் கேள்விகளை தொடுத்தனர்.

ஒருகட்டத்தில், கேள்விகளுக்கு நேரடியான பதில்களை அளிக்காமல் சமாளித்த இவ்விருவரும், இறுதியாகக் கேட்பதாகக் கூறி கேட்கப்பட்ட இரண்டு கேள்விக்கும் பதிலளிக்காது, ஆசனங்களை விட்டெழுந்து, தங்களுக்கு முன்பாகவிருந்த ஆவணங்களை அள்ளிக்கொண்டு, மிகவிரைவாகவே அந்தக் கேட்போர் கூடத்திலிருந்து வெளியேறிவிட்டனர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .