Simrith / 2024 ஒக்டோபர் 01 , பி.ப. 12:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
நவ லங்கா நிதஹஸ் கட்சி தலைவர் குமார வெல்கமவின் மரணம் 2022 மே 9 ஆம் திகதி ஏற்பட்ட குழப்பத்தின் போது ஏற்பட்ட காயங்களினால் ஏற்பட்டதாக முன்னாள் எம்.பி. ஒருவர் தெரிவித்துள்ளார்.
“2022 மே 9 ஆம் திகதி அரகலயவை ஆரம்பித்தவர்கள் அவரை கடுமையாக தாக்கியதில் வெல்கமவுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டன. வெல்கமவுக்கு அரகலயவின் போது ஏற்பட்ட காயங்கள் காரணமாக அவர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு அவ்வப்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்” என நேற்று மாலை இடம்பெற்ற அன்னாரின் இறுதி சடங்கில் கலந்து கொண்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த தெரிவித்தார்.
முன்னாள் எம்.பி., 2022 மே 9 அன்று தாக்குதலுக்கு உள்ளான நேரத்தில் அவர் எதிர்க்கட்சி உறுப்பினராக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .