Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 12 , மு.ப. 10:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.நிரோஷினி
நாடாளுன்றத்தில் நேற்று (11), எதிர்க் கட்சியினரின் தொடர் குழப்பத்தையும் எதிர்ப்பையும் மீறி , புதிய அரசமைப்புப் பேரவையில் உள்ளடங்கும் உறுப்பினர்களது நியமனங்களுக்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில், குறித்த பேரவைக்கான சிவில் செயற்பாட்டாளர்கள் மூவரின் நியமனம் உறுதிசெய்யப்பட்டது.
அந்த வகையில், பேராசிரியர் ஜயந்த தனபால, சட்டத்தரணி அஹமட் ஜாவிட் யூசூப் மற்றும் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகநாதன் செல்வகுமாரன் ஆகியோர், பேரவை உறுப்பினர்களாக நியமனம் பெற்றுள்ளனர்.
அரசமைப்புப் பேரவை மூலமான பதவி நியமனங்கள் மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்களின் செயற்பாடுகள் குறித்தும் அரசமைப்புப் பேரவையில் சிவில் பிரதிநிதிகளின் நியமனம் குறித்தும், சபையில் நேற்று கடும் தர்க்கம் ஏற்பட்டது.
நேற்று கூடிய நாடாளுமன்ற அமர்வின்போது, குறித்த அரசமைப்புப் பேரவையில், நீதி அமைச்சர் அங்கம் வகிக்கும் நிலையில், எவ்வாறு பிரதம நீதியரசர் நியமிக்கப்படுவார்? இதில் சுயாதீனம் இல்லையென, ஒன்றிணைந்த எதிரணியினரால், சபையில் சர்ச்சை ஏற்படுத்தப்பட்டது.
இதன்போது கருத்துரைத்த தினேஷ் குணவர்தன எம்.பி, அரசமைப்புப் பேரவை உருவாக்கப்பட்டு, நாடாளுமன்றத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ள போதும், அரசமைப்புப் பேரவைக்கான உறுப்பினர் நியமனங்களில் பாரிய சிக்கல்கள் எழுந்துள்ளதென்றும் பொலிஸ் மா அதிபர் குறித்த விமர்சனங்களில், அவரை விசாரிக்கும் எந்த நடவடிக்கையும், பேரவை எடுத்துக்கொண்டதாக அறியக் கிடைக்கவில்லை என்றும் குற்றஞ்சாட்டினார்.
அத்துடன், அரசமைப்புப் பேரவையின் சட்டதிட்டங்கள் எவ்வாறு கையாளப்படுகின்றன என்பது குறித்தும் சந்தேகம் வெளியிட்ட அவர், குறித்த பேரவை ஊடான நியமனங்கள், தவறானவை என்பதே, இதுவரை உறுதியாகி உள்ளதென்றும் கூறினார்.
அதேபோல், இந்தப் பேரவையில், பெண் பிரதிநிதித்துவம் ஏன் உள்ளடக்கப்படவில்லை என்றும், தினேஸ் எம்.பி வினவினார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல, இந்த விவகாரம் குறித்து, நேற்றுக் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பேசியபோது, அங்கு மௌனம் காத்த தினேஷ் குணவர்தன, இங்கு பிரச்சினை எழுப்புவதாகவும் அரசமைப்புச் பேரவையானது, 19ஆவது திருத்தத்தின் அடிப்படையில் இயங்குவதால், இதனூடான நியமனங்கள் அனைத்தும், சுயாதீனமாக இடம்பெறுவதாகக் கூறினார்.
இதன்போது ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பிய ஆஸு மாரசிங்க எம்.பி, பெண் பிரதிநிதித்துவம் பற்றிப் பேசுபவர்கள், அவர்களது ஆட்சியின் போது, நிதியரசராக இருந்த பெண்ணை, சட்டவிரோதமாக வெளியேற்றினார்கள் என்றார்.
இதன்போது ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பிய சுசில் பிரேமஜயந்த எம்.பி, பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்ட தாம் தான், மூன்றில் இரண்டுப் பெரும்பான்மைக்கான முழு ஆதரவைக் கொடுத்து 19ஆவது திருத்தத்தை நிறைவேற்றியதாகவும் அவ்வாறு இருக்கையில், இன்று அரசமைப்புப் பேரவையின் செயற்பாடுகளில் சிக்கல்கள் உள்ளதென்றும் கூறினார்.
தொடர் விவாதம் முன்னெடுக்கபட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ச்சியாக குழப்பத்தை விளைவித்த போதும், சபையில் புதிய நியமனத்துக்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டு சிவில் உறுப்பினர்கள் மூவரின் நியமனம் உறுதியாக்கப்பட்டது.
அதுவரை சபையை வழிநடத்திய பிரதிச் சபாநாயகர், சபா பீடத்தை விட்டு எழுந்துச் சென்றவுடன், சபாநாயகர் கரு ஜயசூரிய, சபாபீடத்துக்கு வந்தார். சபை மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட போது, ஒன்றிணைந்த எதிரணியினர், சபையைக் குழப்பினர்.
இதன்போது மீண்டும் ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, “சிவில் உறுப்பினர்களின் நியமனத்தில் குழப்பங்களை விளைவிக்கின்றனர். ஆனால், இந்த மூவரும் மிகவும் திறைமையான, விமர்சனம் இல்லாத நபர்கள். இவர்களின் நியமனத்தில் குழப்பங்களை விளைவித்தால், மக்கள் மத்தியில் தவறான சிந்தனை சென்று, இறுதியில் இவர்கள் மூவர் தொடர்பிலும் தவறான கருத்துகள் பரவும். பாரிய குழப்பங்களை ஏற்படுத்தாது இவர்களின் நியமனத்துக்கு இடங்கொடுத்தால், அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்.” என்றார்.
இதன்போது சபையைத் தெளிவுபடுத்திய சபாநாயகர், “அரசமைப்புப் பேரவைக்கான அரசியல் உறுப்பினர்கள், ஏற்கெனவே நியமிக்கப்பட்டு விட்டனர். சிவில் உறுப்பினர்கள், இப்போது நியமிக்கப்பட்டனர். அவர்களின் நியமனக் கடிதங்கள், இன்றே வந்துவிடும். நாளை நண்பகல், பேரவை கூடி, புதிய நீதியரசர் குறித்து ஆராயும்” என்றார்.
இதன்போது ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பிய அநுரகுமார திசாநாயக்க எம்.பி, “பொலிஸ் மா அதிபர் நியமனம், மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. அவர், அரசமைப்புப் பேரவையின் மூலமாகவே நியமிக்கப்பட்டார். ஆனால் அவர் நடந்துகொள்ளும் விதம், பேரவையையே கேலிக்குள்ளாக்கியுள்ளது” என்றார்.
இதன்போது குறுக்கிட்ட சபாநாயகர், “பொலிஸ் ஆணைக்குழு கொடுத்த அறிக்கைக்கு அமையவே, நான் சகல நடவடிக்கையையும் எடுத்துள்ளேன்” என்றார்.
இருப்பினும், ஒன்றிணைந்த எதிரணியினர், மீண்டும் ஒழுங்குப் பிரச்சினைகளை எழுப்பியதால், சபையில் அமைதியின்மை நிலவியது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Jul 2025
14 Jul 2025
14 Jul 2025