2025 மே 19, திங்கட்கிழமை

அரசியல் கைதிகளின் விடுதலை முடிவுக்கு வருமென நம்பிக்கையுண்டு

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 21 , மு.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்துள்ள தீர்மானத்தை தான் வரவேற்பதாகவும் இவ்விடயம் தொடர்பில் அவரிடம் தான் கலந்துரையாடி வருவதாகவும், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பிலான பிரச்சினை ஒரு முடிவுக்கு வருமென தான் நம்புவதாகவும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,  

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் பல்வேறு முயற்சிகள் பல்வேறு தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டிருந்தும் அவை பயன்தராமல் போயிருந்தன. இந்நிலையில் ஜனாதிபதி உறுதி மொழியைத் தவிர வேறு எவரதும் கருத்துக்களை ஏற்காத நிலைக்கு தமிழ் அரசியல் கைதிகள் தள்ளப்பட்டிருந்தனர்.

வடக்கு மாகாண சபை உட்பட கடந்த கால தேர்தல்களின்போது தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை என்ற விடயத்தையே பிரதானமாக வைத்து வாக்கு கேட்டவர்கள், பதவிகளுக்கு வந்ததும் அவ்விடயம் பற்றி அறிக்கைகளை வெளியிடுவதோடு மாத்திரம் நின்று விட்டார்கள். இவர்கள் நினைத்திருந்தால், அரசாங்கத்தின் 100 நாட்கள் வேலைத்திட்டத்தின்போது இக்கைதிகளின் விடுதலை தொடர்பில் நடவடிக்கை எடுத்திருக்க முடியும். ஆனால், அவர்கள் அதைச் செய்யாது, பொதுத் தேர்தல் வெற்றிக்காக தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை விடயத்தை தக்க வைத்துக் கொண்டனர்.

இப்போதும்கூட இவர்கள், இப்பிரச்சினையைத் தீர்க்கத் தயாராக இல்லை. உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலின்போது வாக்கு வேட்டைக்காக இப்பிரச்சினையைத் தொடரவே எண்ணியிருந்தனர்.

எனினும், ஜனாதிபதியின் தலையிட்டு தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் சாதகமான நடவடிக்கை எடுத்திருப்பது வரவேற்கத்தக்கது எனத் தெரிவித்துள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X