2026 மே 11, திங்கட்கிழமை

dd

அழகுசாதனப் பொருட்களைக் கடத்த முயன்றவர் கைது

Simrith   / 2024 டிசெம்பர் 03 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை விமானப் பயணி ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ரூ. 5 மில்லியன் மதிப்புள்ள அழகுசாதனப் பொருட்களைக் கடத்த முயன்றபோது கைது செய்யப்பட்டார்.

மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய குறித்த சந்தேகநபர், விமான நிலைய வருகை ஓய்வறையில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.  

சந்தேக நபர் அடிக்கடி பயணம் செய்பவர் மற்றும் வர்த்தகர் எனவும், அவர் இந்தியாவின் மும்பையில் இருந்து நாட்டிற்கு வந்துள்ளதாகவும் சுங்க விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரது பொருட்களில் அழகுசாதனப் பொருட்கள் நிரம்பியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.  

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை இலங்கை சுங்கப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .