2025 மே 20, செவ்வாய்க்கிழமை

அவன்ட் காட் ஆயுதக்கப்பல் விவகாரம்: சீல் உடைத்து சோதனை

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 29 , மு.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு, காலி துறைமுகத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அவன்ட் காட் கப்பலில் உள்ள கொள்கலன்களின் சீல் உடைக்கப்பட்டு, சோதனைகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் நேற்று புதன்கிழமை ஆரம்பிக்கப்பட்டன.

பாரிய மோசடி, ஊழல், அரச சொத்துக்கள் மற்றும் சிறப்புரிமைகளை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளே இந்தச் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்தக் கப்பலில் இருந்த ஆயுதங்களைக் கைப்பற்றிய குற்றப்புலனாய்வு பிரிவினர்;, அவற்றை மூன்று கொள்கலன்களில் களஞ்சியப்படுத்தி சீல் வைத்திருந்தனர். 

இந்த ஆயுதங்களைச் சோதனைக்கு உட்படுத்தி முடிப்பதற்கு ஆகக்குறைந்தது மூன்று நாட்களாகவது எடுக்கும் என்று அறியமுடிகின்றது. 

காலி கடற்கரையிலிருந்து 12 கடல் மைல் தொலைவில், 810 ஆயுதங்களுடன் அவன்ட் காட் கப்பல், ஒக்டோபர் 6ஆம் திகதி கைப்பற்றப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X