J.A. George / 2020 ஒக்டோபர் 06 , பி.ப. 02:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
மினுவங்கொடை பிரெண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அனைவரும் நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தாலும் வெளியில் நடமாட வேண்டாம் என அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.
அத்துடன், அவர்கள் அனைவரும் தங்களது வீடுகளில் சுய தனிமைப்படுத்தலை முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கம்பஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இன்று மாலை 6.00 முதல் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அத்துடன், கொரோனா தொற்றாளர்கள் இருக்கலாம் என்று இனங்காணப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள குடும்பங்களை தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்து செல்லும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

3 hours ago
6 hours ago
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
02 May 2026