Simrith / 2023 நவம்பர் 14 , மு.ப. 10:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
2024 ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத் திட்டம் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) இன்னும் முடிவெடுக்கவில்லை என கூறியுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, கட்சி இது குறித்து விரைவில் முடிவெடுக்கும் என நேற்று (13) தெரிவித்தார்.
SLPP தம்மால் ஏற்றுக்கொள்ளக்கூடிய பிரேரணைகளை ஆதரிக்கும் என்றும், ஏற்றுக்கொள்ள முடியாதவற்றை ஆதரிக்காது என்றும் ஊடகங்களுக்கு நேற்று (13)கருத்து தெரிவித்த போது கூறினார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதியுடன் வரவு- செலவு திட்ட முன்மொழிவுகள் பற்றி கலந்துரையாடியதா என வினவியபோது, தான் அவ்வாறு எந்தவொரு கலந்துரையாடலிலும் கலந்து கொள்ளவில்லை என்றும், கட்சியில் உள்ள மற்றவர்கள் அத்தகைய கலந்துரையாடலில் கலந்து கொண்டார்களா? என்பது தனக்கு தெரியாது என்றும் மஹிந்த மேலும் தெரிவித்தார்
2 hours ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
5 hours ago