Editorial / 2026 மார்ச் 20 , பி.ப. 05:47 - 0 - {{hitsCtrl.values.hits}}

நீதி அமைச்சர் அவதூறான முறையில் சைகையை தனக்கு காட்டியதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி அஜித் பி. பெரேரா இன்று (20) சபாநாயகரிடம் முறைப்பாடு செய்தார்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ச்சியாகக் கூச்சலிட்டதால் சபையில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா உரையாற்றுகையில், "இங்கே ஊழல்வாதிகளான அமைச்சர்கள் இருப்பதைப் போலவே, வேலை செய்யத் தெரியாத அமைச்சர்களும் இருக்கிறார்கள்" என்று குறிப்பிட்ட போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
அஜித் பி. பெரேரா: "அவர் காட்டிய அந்தச் சைகையை என்னால் இங்கே காட்ட முடியாது, ஏனெனில் அது எனக்குப் பொருத்தமானதல்ல. அவர் செய்த அந்தச் செயலை இங்கே இருக்கும் அனைத்து உறுப்பினர்களும் பார்த்தார்கள். அவர் இதற்காக மன்னிப்புக் கோர வேண்டும்."
நீதியமைச்சர் ஒரு கையில் நான்கு விரல்களையும் மடக்கிவிட்டு ஒன்றை விரலை தூக்கி காண்பித்தார்.
2 hours ago
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
5 hours ago