J.A. George / 2021 ஜனவரி 08 , பி.ப. 05:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில், நைஜீரிய பிரஜைகளின் தலையீட்டுடன் நாட்டில் முன்னெடுக்கப்படும் இணையத்தள மோசடிகள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
இலங்கையிலுள்ளவர்களின் மின்னஞ்சல் முகவரிகளை பயன்படுத்தி, அதனூடாக இணையத்தள மோசடிகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
மொரட்டுவை பகுதியில் வசிக்கும், கட்டட நிர்மாணத்தில் ஈடுபடும் ஒருவரால் மற்றுமொருவருக்கு 09 இலட்சம் ரூபாய் வழங்கப்படுவதாக மின்னஞ்சலூடக தெரிவித்து மோசடி இடம்பெற்றுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் நுகேகொடை பகுதியில் வசிக்கும் நைஜீரிய பிரஜை ஒருவரும் மருதானை மற்றும் வெல்லம்பிட்டி பகுதிகளில் வசிக்கும் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூன்று பேரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
19 minute ago
30 minute ago
36 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
30 minute ago
36 minute ago
51 minute ago