Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Kanagaraj / 2015 ஒக்டோபர் 20 , மு.ப. 03:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
'கலப்பு யுத்தக்குற்ற நீதிமன்ற நடவடிக்கைக்கு எதிராகுவோம்' என்ற தொனிப்பொருளில், இணைந்த எதிரணி, கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் நேற்று திங்கட்கிழமை நடத்திய மாநாட்டில், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 32 பேர் பங்கேற்றனர்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, மக்கள் ஐக்கிய முன்னணி, ஜனநாயக இடதுசாரி முன்னணி, தேசிய சுதந்திர முன்னணி, பிவிதுரு ஹெல உறுமய உள்ளிட்ட கட்சிகள் இணைந்தே இந்த மாநாட்டை நடத்தின.
இந்த மாநாட்டில், நாடாளுமன்ற உறுப்பினர்களான வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, தினேஷ் குணவர்தன ஆகியோரோடு, முன்னாள் நா.உ.களான டியூ குணசேகர, திஸ்ஸ விதாரண, ஜி.எல். பீரிஸ் ஆகியோர் உரையாற்றினர்.
நாடாளுமன்ற உறுப்பினர்களான குமார் வெல்கம, டளஸ் அலகபெரும, பந்துல குணவர்தன, ரோஹித்த அபேகுணவர்தன, விதுர விக்ரமநாயக்க, பிரசன்ன ரணதுங்க, சாலிந்த திஸாநாயக்க, காமினி லொக்குகே, நாமல் ராஜபக்ஷ, ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ உட்பட 32 எம்.பி.களே பங்கேற்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago