2025 ஜூலை 09, புதன்கிழமை

’இது முதலாவது வெற்றி’

Editorial   / 2018 நவம்பர் 13 , பி.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அமைவாக, மக்கள் தங்களது முதலாவது வெற்றியைப் பெற்றுள்ளனரென்று, முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தைக் கலைத்தமைக்கு எதிராக, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 13 அடிப்படை உரிமை மனுக்கள் தொடர்பான விசாரணைகளின் தீர்ப்பாக, ஜனாதிபதியின் தீர்மானத்துக்கு எதிராக, உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்தது.

இதனையடுத்து, அவர் தனது டுவிட்டர் பக்கதில் பதிவிட்டுள்ள குறிப்பிலேயே, இவ்வாறுத் தெரிவித்துள்ளார்.

மேலும் குறிப்பிட்டுள்ள அவர், “நாங்கள் முன்னோக்கிச் செல்லலாம். அன்பான நாட்டில் இறையாண்மையை நிலைநாட்ட முடியுமென்றும்” அவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .