2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

இந்தியத் தூதுவருடன் தமிழரசு எம்.பிக்கள் சந்திப்பு

Freelancer   / 2025 செப்டெம்பர் 24 , மு.ப. 08:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவுக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (24) நடைபெற்றது.

கொழும்பில் உள்ள இந்தியத் தூதுவரின் இல்லமான 'இந்தியா ஹவுஸில்' நேற்றுப் பிற்பகல் 3.30 மணிக்கு இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

இதில் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன், இரா.சாணக்கியன், வைத்தியர் ப.சத்தியலிங்கம், ச.குகதாசன், து.ரவிகரன், வைத்தியர் இ.சிறிநாத் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது வடக்கு - கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகள் மற்றும் தேசிய அரசியல் பிரச்சினைகள் தொடர்பில் பேசப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .