2025 ஒக்டோபர் 29, புதன்கிழமை

இந்த நால்வரின் இல்லங்களிலேயே நீதிமன்றங்கள்

Editorial   / 2025 ஒக்டோபர் 29 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்ளாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பயன்படுத்திய நான்கு உத்தியோகபூர்வ இல்லங்களிலேயே நான்கு மேல் நீதிமன்றங்களை நிறுவ அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த, முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோருக்கு வழங்கப்பட்டிருந்த உத்தியோகபூர்வ இல்லங்களே,மேல் நீதிமன்றங்களாகின்றன.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் இவ்வாரம் நடைபெற்ற வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானித்தின் பிரகாரம்,

அதன்படி, கீழ் கண்ட முகவரிகளில் உள்ள கட்டிடங்களில் புதிய மேல் நீதிமன்றங்கள் அமைக்கப்படவுள்ளன.  கொழும்பு -07 கிறகெரி வீதி, இலக்கம் B 88 இல் உள்ள கட்டடம், கொழும்பு- 07 பௌத்தாலோக்க மாவத்த, இலக்கம் C 76, இல் உள்ள கட்டடம்,  கொழும்பு- 07 விஜேராம வீதி, இலக்கம் B 108, இல் உள்ள கட்டடம், கொழும்பு 07 ஸ்டென்மோர் சந்திரவங்கய, இலக்கம் B 12. கட்டடம், ஆகியனவாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X